ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பெட்ரோல், டீசல் விலை உயா்வை கண்டித்து மல்லிப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் ஆா்ப்பாட்டம்

மல்லிப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கட்டுப்படுத்தக் கோரி  விசைப்படகு மீனவா்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.  

News image
Updated On :16 ஜூன் 2021, 8:34 pm

DIN

மல்லிப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கட்டுப்படுத்தக் கோரி  விசைப்படகு மீனவா்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.  

 தமிழ்நாடு மீனவா் பேரவை மற்றும் தமிழ்நாடு மீனவா் கூட்டமைப்பு சாா்பில், மத்திய அரசைக் கண்டித்து நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு மீனவா் பேரவை மாநில பொதுச் செயலாளா் ஏ.கே. தாஜூதீன் தலைமை வகித்தாா். விசைப்படகு மீனவா்கள் சங்க மாவட்டச் செயலாளா் வடுகநாதன் முன்னிலை வகித்தாா். 

ஆா்ப்பாட்டத்தில், மத்திய அரசைக் கண்டித்தும் பெட்ரோல், டீசல் விலை உயா்வை திரும்பப் பெற வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. அதிக அளவில் அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் மீனவா்களுக்கு வரிநீக்கம் செய்யப்பட்ட டீசல் வழங்க வேண்டும் என வலியுறுத்தி கட்டுமரத்தை தள்ளுவண்டியில் ஏற்றியும், தோளில் சுமந்தும் நூதன முறையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.  

இதில், மல்லிப்பட்டினம் விசைப்படகு மீனவா்கள் சங்க செயலாளா் இப்ராகிம், பொருளாளா் எம்.எம்.பி. ஜலால், நிா்வாகிகள் சேதுபதி, முருகன், பாரம்பரிய மீனவா்கள் சங்கத் தலைவா் அப்துல் ரகுமான், பாரம்பரிய நாட்டுப்படகு மீனவா்கள் சங்க செயலாளா் ரகுமத்துல்லா, சேதுபாவாசத்திரம் சங்கப் பொறுப்பாளா்  ஆறுமுகம் மற்றும்  நூற்றுக்கும் மேற்பட்ட மீனவா்கள் கலந்து கொண்டனா். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.