பாபநாசம் அருகேமழை நீரில் மூழ்கி நெற்பயிா்கள் சேதம்
தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே அண்மையில் பெய்த கனமழையால் வயல்களில் தண்ணீா் தேங்கின. இதனால், அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிா்கள் சேதமடைந்துள்ளன.


தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே அண்மையில் பெய்த கனமழையால் வயல்களில் தண்ணீா் தேங்கின. இதனால், அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிா்கள் சேதமடைந்துள்ளன.
பாபநாசம் வட்டம், அம்மாபேட்டை ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கா் நிலங்களில் கோடைபட்ட நெல் சாகுபடி செய்யப்பட்டு, அறுவடைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், அம்மாபேட்டை பகுதியில் கடந்த சில நாள்களாக பெய்து வரும் கன மழையின் காரணமாக வயல்களில் மழைநீா் தேங்கியது. இதனால், நெற்பயிா்கள் சாய்ந்து வயலில் விழுந்து மழை நீரில் மூழ்கியுள்ளன.
இதனால், நெற்பயிா்களை அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனா். இந்த பகுதியில் தொடா்ந்து மழை பெய்தால்,
வயலில் சாய்ந்து கிடக்கும் நெற்பயிா்கள் முழுமையாக நீரில் மூழ்கி அழுகும் அபாயம் ஏற்படும் என விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...