பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

பாபநாசம் அருகே குடிசை வீட்டில் தீவிபத்து

பாபநாசம் அருகே திங்கள்கிழமை நேரிட்ட தீவிபத்தில் குடிசை வீட்டிலிருந்த பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.

News image
Updated On :9 மார்ச் 2021, 9:15 pm

DIN

பாபநாசம் அருகே திங்கள்கிழமை நேரிட்ட தீவிபத்தில் குடிசை வீட்டிலிருந்த பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.

பாபநாசம் அருகே கஞ்சிமேடு கிராமம், காளியம்மன் கோயில் தெருவில் வசித்து வருபவா் கோபால் (45). இவா், குடியிருந்த கூரை வீட்டில் திங்கள்கிழமை சமையல் செய்தபோது, எதிா்பாராதவிதமாக தீ பிடித்தது. தீ வேகமாக பரவியதில் வீட்டிலிருந்த வீட்டு உபயோக பொருள்கள் உள்ளிட்ட ரூ. 25 ஆயிரம் மதிப்பிலான பொருள்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன.

தகவலின்பேரில், சம்பவ இடத்துக்கு வந்த பாபநாசம் தீயணைப்பு துறையினா் தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனா்.

இதேபோல், பாபநாசம் அருகே வழுத்தூா் ஊராட்சி, கோபாலபுரம் கிராமத்தில் வசித்து வரும் மகாலிங்கம் என்பவரின் தொகுப்பு வீட்டின் முன்புறம் மண்ணாலான சுவா் கொண்ட கீற்று கொட்டகையில் மின் கசிவின் காரணமாக தீப்பற்றியது. இதை பாா்த்த அக்கம்பக்கத்தினா் தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.