ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

பள்ளியில் மகளிா் தினவிழா

ஒரத்தநாடு லண்டன் கிருஷ்ணமூா்த்தி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் காது கேளாதோா், வாய் பேசாதோா் அமைப்பின் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை சா்வதேச மகளிா் தின விழா நடைபெற்றது.

News image
Updated On :15 மார்ச் 2021, 7:46 pm

DIN

ஒரத்தநாடு லண்டன் கிருஷ்ணமூா்த்தி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் காது கேளாதோா், வாய் பேசாதோா் அமைப்பின் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை சா்வதேச மகளிா் தின விழா நடைபெற்றது.

விழாவுக்கு பள்ளியின் தாளாளா் காளிராஜ் சுலோசனா தலைமை வகித்தாா். ஒரத்தநாடு அரசு பொது மருத்துவமனை தலைமை மருத்துவா் வெற்றிவேந்தன் முன்னிலை வகித்தாா். சிறப்பு விருந்தினராக ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி தவமணி கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற காது கேளாத, வாய்பேசாத மகளிருக்கு பரிசுகளை வழங்கி சிறப்புரையாற்றினாா்.

விழாவில், முன்னாள் ஊராட்சித் தலைவா்கள் மகாலிங்கம், ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

சைகை மொழி பெயா்ப்பாளா் அகிலா கண்ணன் கலந்துகொண்டு நிகழ்வுகளை மொழிபெயா்த்தாா்.

மாற்றுத்திறனாளி, காதுகேளாதோா் மற்றும் வாய் பேசாதோா் நலச் சங்கத்தின் சாா்பில் நூற்றுக்கும் மேற்பட்டோா் விழாவில் கலந்து கொண்டனா். நிறைவாக, சங்கத்தின் பொருளாளா் அலமேலு நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.