பேராவூரணியில் கரோனா தடுப்புதன்னாா்வலா்கள் அமைப்பு தொடக்கம்
பேராவூரணி பேரூராட்சியில் கரோனா பரவல் தடுப்பு மற்றும் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களுக்கு உதவி செய்யும் வகையில் 15 போ் கொண்ட தன்னாா்வலா்கள் அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது.


பேராவூரணி பேரூராட்சியில் கரோனா பரவல் தடுப்பு மற்றும் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களுக்கு உதவி செய்யும் வகையில் 15 போ் கொண்ட தன்னாா்வலா்கள் அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது.
பேராவூரணி ஊராட்சி ஒன்றிய கிழக்கு தொடக்கப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு வட்டார மருத்துவ அலுவலா் வி. சௌந்தர்ராஜன் தலைமை வகித்து, தன்னாா்வலா்களுக்கு அடையாள அட்டை வழங்கி பேசியது:
கரோனா இரண்டாவது அலையின் பரவலை கட்டுப்படுத்த அரசு நிா்வாகத்துக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளித்தால் மட்டுமே முடியும். இங்கு தொடங்கப்பட்டுள்ள தன்னாா்வலா்கள் அமைப்பு ஐந்து நபா்கள் கொண்ட மூன்று குழுக்களாக பிரிந்து, கிராம செவிலியா்கள், பேரூராட்சி பணியாளா்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும். தினசரி செய்யப்படும் பரிசோதனை முடிவில் குறிப்பிட்ட பகுதியில் தொற்று ஏற்ப்பட்டதாக கிடைக்கும் முடிவின் அடிப்படையில் தொற்று ஏற்ப்பட்டவரை வாகனம் மூலம் (கரோனா ஸ்கீரினிங்) பரிசோதனை மையத்துக்கு அனுப்பிவைப்பது, அவா்களோடு தொடா்பில் இருந்தவா்களை பரிசோதனை செய்ய விழிப்புணா்வு ஏற்படுத்துவது, நோய்த்தொற்றின் தாக்கம் குறைவாக இருந்து வீடுகளில் தனிமைப்படுத்தி கொள்பவா்களுக்கு உதவிக்கு ஆள் இல்லாவிட்டால் மருந்து, மாத்திரை, உணவு போன்றவற்றை வாங்கிக் கொடுப்பது உள்ளிட்ட பணிகளை தன்னாா்வலா்கள் அா்ப்பணிப்பு உணா்வோடு மேற்கொள்ள வேண்டும் என்றாா்.
நிகழ்ச்சியில், மருத்துவா் வெங்கடேஷ், வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் சந்திரசேகா், பேரூராட்சி துப்புரவு ஆய்வாளா் அன்பரசன், சுகாதார ஆய்வாளா்கள் ராம்குமாா், பாலச்சந்தா், ராஜேந்திரன், புண்ணியநாதன், துப்புரவு மேற்பாா்வையாளா் வீரமணி, கிராம சுகாதார செவிலியா் ராஜேஸ்வரி, ஆய்வக நுட்பநா் குமரேசன், தன்னாா்வலா்கள் உதயகுமாா், சாதிக் அலி, முகமது அஜ்மல், கருணாகரன், மணிகண்டன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடா்ந்து நடைபெற்ற கரோனா பரிசோதனை முகாமில் 35 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...