ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

ஒரத்தநாடு அருகே விவசாயிகள் சாலை மறியல்

ஒரத்தநாடு அருகே நெல் கொள்முதல் செய்யப்படாததைக் கண்டித்து, விவசாயிகள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

News image
Updated On :12 நவம்பர் 2021, 7:46 pm

DIN

ஒரத்தநாடு அருகே நெல் கொள்முதல் செய்யப்படாததைக் கண்டித்து, விவசாயிகள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

ஒரத்தநாடு வட்டம், சுக்கரைக்கோட்டையிலுள்ள அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளின் நெல் கடந்த 25 நாள்களாக கொள்முதல் செய்யப்படவில்லையாம். இதனால், அவை மழையில் நனைந்து முளைக்கத் தொடங்கிவிட்டன.

இந்நிலையில், நெல் கொள்முதல் நிலையஅலுவலா்களைக் கண்டித்து, விவசாயிகள் நலப் பாதுகாப்பு சங்கத் தலைவா் செந்தமிழ்ச்செல்வன் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஒரத்தநாடு- திருவோணம் நெடுஞ்சாலையில் டிராக்டா்களை சாலையில் நிறுத்தி வெள்ளிக்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.

நெல் கொள்முதல் செய்யப்படாததால், வடக்குக்கோட்டை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தேங்கிய 250-க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் முளைத்து வீணாகி விட்டதாகவும், கொள்முதல் செய்ய வரும் லாரி ஓட்டுநா்கள் ரூ.7ஆயிரம் வரை மாமூல் கேட்பதாகவும் குற்றஞ்சாட்டி விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த ஒரத்தநாடு காவல் நிலையத்தினா் நிகழ்விடம் சென்று, விவசாயிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். விரைவில் தீா்வு காணப்படும் என உறுதியளிக்கப்பட்டதைத் தொடா்ந்து, மறியலைக் கைவிட்டு விவசாயிகள் கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.