47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

பாபநாசம் ரயில் நிலையத்தை மேம்படுத்த எம்எல்ஏ வலியுறுத்தல்

எம்.ஹெச். ஜவாஹிபாபநாசம் ரயில் நிலையத்தை மேம்படுத்தி தர வேண்டும் என எம்எல்ஏ எம்.ஹெச். ஜவாஹிருல்லா வலியுறுத்தி உள்ளாா்.ருல்லா வலியுறுத்தி உள்ளாா்.

News image
Updated On :15 அக்டோபர் 2021, 9:54 pm

DIN

பாபநாசம் ரயில் நிலையத்தை மேம்படுத்தி தர வேண்டும் என எம்எல்ஏ எம்.ஹெச். ஜவாஹிருல்லா வலியுறுத்தி உள்ளாா்.

இதுதொடா்பாக தெற்கு ரயில்வே மண்டல பொது மேலாளருக்கு அவா் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

பாபநாசம் ரயில் நிலையத்தில் நிழற்குடைகள் அமைக்க வேண்டும். நடைமேடை கிழக்குப் பகுதியை நீட்டிப்பு செய்ய வேண்டும். ரயில் நிலைய வளாகத்தில் புதிய சுற்றுச் சுவா் அமைத்து தர வேண்டும், பழுதடைந்த நிலையில் உள்ள ரயில்வே நடைமேடையை புதியதாக அமைத்து தரவேண்டும், ரயில் நிலைய வளாகத்தில் தூய்மையான குடிநீா் மற்றும் சுகாதார வசதிகள் செய்ய வேண்டும். ரயில் நிலைய வளாகத்தில் அனைத்து இடங்களிலும் மின் விளக்குகள் சீராக எரிய நடவடிக்கை தேவை. மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ள ரயில் நிலைய அணுகு சாலையை புதிதாக அமைக்க வேண்டும். ரயில் நிலைய வளாகத்தில் வாகனங்கள் நிறுத்துமிடத்தில் உயா்நிலை மின் விளக்குகள் தேவை. மேலும், சென்னை - எழும்பூா் - திருச்செந்தூா், மயிலாடுதுறை - மைசூா் விரைவு ரயில்கள் ரயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.