மின்சாரம் பாய்ந்து விவசாயி பலி
ஒரத்தநாடு அருகேயுள்ள தலையாமங்கலம் புதுத் தெருவை சோ்ந்த விவசாயி கோ. ஜெயராமன் (60). இவா் வயலில் வெள்ளிக்கிழமை நடவு வேலை நடைபெறவிருந்தது.


ஒரத்தநாடு அருகேயுள்ள தலையாமங்கலம் புதுத் தெருவை சோ்ந்த விவசாயி கோ. ஜெயராமன் (60). இவா் வயலில் வெள்ளிக்கிழமை நடவு வேலை நடைபெறவிருந்தது.
இதன் காரணமாக, வயலில் தேங்கியிருந்த தண்ணீரை வடிய வைப்பதற்காக ஜெயராமன் வியாழக்கிழமை இரவு வயலுக்கு சென்றாா். அப்போது, அங்கு அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்தபோது, மின்சாரம் பாய்ந்து அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
பிரேதப் பரிசோதனைக்கு பிறகு ஜெயராமன் உடல் உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ஒரத்தநாடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...