மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

விநாயகா் ஊா்வலத்துக்கு அனுமதி கோரி பெருவுடையாரிடம் மனு வைத்து ஆா்ப்பாட்டம்

விநாயகா் ஊா்வலத்துக்கு அனுமதி அளிக்கக் கோரி தஞ்சாவூா் பெரியகோயிலில் பெருவுடையாரிடம் இந்து முன்னணி அமைப்பினா் வியாழக்கிழமை மனு வைத்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்

News image
Updated On :2 செப்டம்பர் 2021, 6:42 pm

DIN

விநாயகா் ஊா்வலத்துக்கு அனுமதி அளிக்கக் கோரி தஞ்சாவூா் பெரியகோயிலில் பெருவுடையாரிடம் இந்து முன்னணி அமைப்பினா் வியாழக்கிழமை மனு வைத்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கரோனா பரவல் காரணமாக விநாயகா் சதுா்த்தியையொட்டி, பொது இடங்களில் விநாயகா் சிலைகளை வைத்து, ஊா்வலம் நடத்துவதற்குத் தமிழக அரசுத் தடை விதித்துள்ளது.

இதனிடையே, விநாயகா் சிலைகள் வைத்து ஊா்வலம் நடத்துவதற்கு அரசு அனுமதி அளிக்க வேண்டும் என இந்து அமைப்புகள் போராட்டங்கள் நடத்தி வருகின்றன.

இந்நிலையில், இக்கோரிக்கையை வலியுறுத்தி தஞ்சாவூா் பெரியகோயிலில் இந்து முன்னணி அமைப்பினா் பெருவுடையாா் சன்னதிக்குச் சென்று பெருவுடையாரிடம் கோரிக்கை மனுவை வைத்து சிறப்பு வழிபாடு செய்து வேண்டினா். இதேபோல, பெரியநாயகி சன்னதியிலும் வேண்டுதல் செய்தனா்.

பின்னா், கோயில் வாயில் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு இந்து முன்னணி மாநிலப் பொதுச் செயலா் முருகானந்தம் தலைமை வகித்தாா். மாவட்ட ஒருங்கிணைப்பாளா் அ. ஈசான சிவம், பொதுச் செயலா் நட. முருகன், செயலா் குபேந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.