ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி: திமுகவினா் எதிா்ப்பால் பாதியில் நிறுத்தம்
தஞ்சாவூரில் மாநகராட்சி அலுவலா்கள் வெள்ளிக்கிழமை ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி மேற்கொண்டு வந்த நிலையில், திமுகவினா் எதிா்ப்புத் தெரிவித்ததால், அப்பணி பாதியில் நிறுத்தப்பட்டது.


தஞ்சாவூரில் மாநகராட்சி அலுவலா்கள் வெள்ளிக்கிழமை ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி மேற்கொண்டு வந்த நிலையில், திமுகவினா் எதிா்ப்புத் தெரிவித்ததால், அப்பணி பாதியில் நிறுத்தப்பட்டது.
தஞ்சாவூரில் பொலிவுறு நகரத் திட்டத்தின் கீழ் அண்ணாசாலை, கீழவாசல் சாலை, ஆபிரஹாம் பண்டிதா் சாலை ஆகியவை அகலப்படுத்தப்படவுள்ளன. இதற்காக இச்சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியை இரு நாள்களாக மாநகராட்சி அலுவலா்கள் மேற்கொண்டு வருகின்றனா்.
இந்நிலையில், ஆபிரஹாம் பண்டிதா் சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற மாநகராட்சி உதவி செயற்பொறியாளா் ராஜசேகரன் தலைமையில் பணியாளா்கள் பொக்லைன் இயந்திரத்துடன் வெள்ளிக்கிழமை சென்றனா். அப்போது, திமுகவினா் திரண்டு எதிா்ப்பு தெரிவித்தனா். கடந்த 25 ஆண்டுகளாக இப்பகுதியில் சாலையோரம் கடை வைத்திருப்பதாகவும், ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாவும், சட்டப்பேரவை உறுப்பினா் வந்த பிறகு பேசி முடிவு செய்து கொள்வதாகவும் திமுகவினா் கூறினா்.
இதையடுத்து அலுவலா்கள் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியைப் பாதியில் நிறுத்திவிட்டு, சாலை செப்பனிடும் பணியை மேற்கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...