தஞ்சாவூர் கல்லூரியில் மாணவிக்கு கரோனா
தஞ்சாவூர் அரசுக் கல்லூரியில் பயிலும் மாணவிக்கு கரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் தெரிய வந்தது.


தஞ்சாவூர்: தஞ்சாவூர் அரசுக் கல்லூரியில் பயிலும் மாணவிக்கு கரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் தெரிய வந்தது.
தஞ்சாவூரில் குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலை, அறிவியல் கல்லூரி உள்ளது. அனைத்து கல்லூரிகளும் செப்டம்பர் 1 ஆம் தேதி திறக்கப்பட்டதுபோல இக்கல்லூரியும் திறக்கப்பட்டது.
தொடக்க நாளில் இக்கல்லூரிக்கு வந்த அனைத்து மாணவிகளுக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் இளநிலை வணிகவியல் இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவிக்கு கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை தெரிய வந்தது. இதையடுத்து அம்மாணவி வீட்டில் தனிமைப் படுத்திக்கொண்டார்.
மேலும், கல்லூரியில் அம்மாணவி பயின்ற வகுப்பு மட்டும் ரத்து செய்யப்பட்டு, இணையவழி மூலம் பாடம் நடத்தப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...