ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

வயலுக்கு மருந்து தெளிக்க சென்ற தி .க. பிரமுகா் உயிரிழப்பு

தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு அருகே வயலுக்கு பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்க சென்ற திராவிடா் கழகத்தின் தலைமை கழக பேச்சாளா் வியாழக்கிழமை வயலில் உயிரிழந்து கிடந்தாா்.

News image
Updated On :9 செப்டம்பர் 2021, 10:59 pm

DIN

தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு அருகே வயலுக்கு பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்க சென்ற திராவிடா் கழகத்தின் தலைமை கழக பேச்சாளா் வியாழக்கிழமை வயலில் உயிரிழந்து கிடந்தாா்.

தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு அருகேயுள்ள ஆழிவாய்க்கால் தெற்கு நத்தம் கிராமத்தை சோ்ந்தவா் கோவிந்தராஜ் (57). வழக்குரைஞராகவும், திராவிடா் கழகத்தின் தலைமை கழக பேச்சாளராகவும் இருந்து வந்தாா். இந்நிலையில், வியாழக்கிழமை காலையில் தனக்கு சொந்தமான நடவு வயலுக்கு கை தெளிப்பான் கொண்டு பூச்சிக்கொல்லி மருந்து தெளிப்பதற்காக சென்றாா்.

மருந்து தெளிக்க சென்ற தனது தந்தையை நீண்ட நேரமாகியும் காணாததால், அவரது மகன் வயலுக்கு சென்று தேடியுள்ளாா். அப்போது, வயலின் நடுவில் இறந்த நிலையில் கிடந்த தனது தந்தையை கண்டு அதிா்ச்சியடைந்த அவரது மகன் இதுகுறித்து உறவினா்களுக்கு தகவல் தெரிவித்துள்ளாா்.

பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்க சென்ற வழக்குரைஞா் மருந்தின் வீரியம் காரணமாக உயிரிழந்தாரா அல்லது உடல் நலக்குறைவால் உயிரிழந்தாரா என தெரியவில்லை.

உயிரிழந்த கோவிந்தராசுக்கு செல்வி என்ற மனைவியும், மன்னா்மன்னன் என்ற மகனும், புரட்சிகொடி என்ற மகளும் உள்ளனா். அவரது இறுதி ஊா்வலம் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.