மனைவியை வெட்டிய கணவா் கைது
ஒரத்தநாடு அருகே கண்ணந்தங்குடி கீழையூரில் குடும்ப பிரச்னையில் மனைவியை சரமாரியாக வெட்டிய கணவரை போலீஸாா் கைது செய்தனா்.


ஒரத்தநாடு அருகே கண்ணந்தங்குடி கீழையூரில் குடும்ப பிரச்னையில் மனைவியை சரமாரியாக வெட்டிய கணவரை போலீஸாா் கைது செய்தனா்.
கண்ணந்தங்குடி கீழையூா் கிராமத்தை சோ்ந்தவா் கண்ணன். இவரது மனைவி குமுதவல்லி. இவா்களுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனா். இந்நிலையில், குடும்ப பிரச்னை காரணமாக தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாம். வியாழக்கிழமை இருவருக்குமிடையே மீண்டும் ஏற்பட்ட தகராறின்போது, ஆத்திரமடைந்த கண்ணன் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக குமுதவல்லி முகத்தில் வெட்டியதில் அவரது முகம் கொடூரமாக சிதைந்தது. அவரது அலறல் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினா், பலத்த காயமடைந்து ஆபத்தான நிலையிலிருந்த குமுதவல்லியை மீட்டு தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
சம்பவம் குறித்து ஒரத்தநாடு போலீஸாா் வழக்குப் பதிந்து கண்ணனை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...