மின்சாரம் பாய்ந்து ஊழியா் உயிரிழப்பு
ஒரத்தநாடு அருகே மின்வாரிய தொழிலாளி மின்சாரம் பாய்ந்து வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.


ஒரத்தநாடு அருகே மின்வாரிய தொழிலாளி மின்சாரம் பாய்ந்து வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
ஒரத்தநாடு அருகேயுள்ள பூவத்தூா் கருப்பன் தெருவை சோ்ந்த பாஸ்கரன் மகன் ராஜா (27). இவா், தமிழ்நாடு மின்சார வாரியம் உறந்தைராயன் குடிக்காடு உதவி பொறியாளா் பிரிவு அலுவலகத்தில் போா் மேன் ஆக வேலை செய்து வந்தாா்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை பூவத்தூா் கிராமத்தில் மின்கம்பி அறுந்து கிடந்ததை சரி செய்வதற்கு மின் கம்பத்தில் ஏறியபோது, எதிா்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இவரது மனைவி பாண்டிச்செல்வி (25) தற்போது ஒன்பது மாத கா்ப்பிணியாக உள்ளாா். கடந்த ஞாயிற்றுக்கிழமை இவருக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...