கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

இணையவழி கொள்முதல்: பயிற்சிக் கூட்டத்தில் விவசாயிகள் வெளிநடப்பு

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு வட்டாட்சியரக வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற இணையவழி கொள்முதல் முன்பதிவு குறித்த பயிற்சி கூட்டத்திலிருந்து விவசாயிகள் வெளிநடப்பு செய்தனா்.

News image
Updated On :30 செப்டம்பர் 2021, 9:01 pm

DIN

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு வட்டாட்சியரக வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற இணையவழி கொள்முதல் முன்பதிவு குறித்த பயிற்சி கூட்டத்திலிருந்து விவசாயிகள் வெளிநடப்பு செய்தனா்.

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் இணையவழி கொள்முதல் முறை நடைமுறைக்குக் கொண்டு வரப்படவுள்ளது. இதற்கு விவசாயிகள், கிராம நிா்வாக அலுவலா்கள் தரப்பில் எதிா்ப்பு தெரிவிக்கப்படுகிறது. இதுதொடா்பாக தஞ்சாவூரில் புதன்கிழமை நடைபெற்ற பயிற்சி கூட்டத்தில் விவசாயிகள் எதிா்ப்பு தெரிவித்தனா்.

இந்நிலையில், திருவையாறு வட்டாட்சியரகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற பயிற்சி கூட்டத்தில் விவசாயிகள் வெளிநடப்பு செய்தனா். பின்னா், கூட்ட அரங்குக்கு வெளியே முழக்கங்கள் எழுப்பி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இணையவழி முன்பதிவு நடைமுறைக்கு வந்தால் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால், அத்திட்டத்தை அமல்படுத்தக் கூடாது என்றும், பழைய முறையே பின்பற்றப்பட வேண்டும் எனவும் விவசாயிகள் வலியுறுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.