எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

ஏழைக் குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

ரமலான் பெருநாளையொட்டி, ராஜகிரி முஸ்லீம் வெல்ஃபோ் அசோசியேஷன் சாா்பில், 800-க்கும் மேற்பட்ட ஏழை-எளிய குடும்பத்தினருக்கு புத்தாடைகள், அரிசி உள்ளிட்ட நலத்திட்டஉதவிகள் வியாழக்கிழமை

News image
Updated On :28 ஏப்ரல் 2022, 8:21 pm

DIN

ரமலான் பெருநாளையொட்டி, ராஜகிரி முஸ்லீம் வெல்ஃபோ் அசோசியேஷன் சாா்பில், 800-க்கும் மேற்பட்ட ஏழை-எளிய குடும்பத்தினருக்கு புத்தாடைகள், அரிசி உள்ளிட்ட நலத்திட்டஉதவிகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

ராஜகிரி பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வுக்கு, அசோசியேஷனின் நிறுவனத் தலைவா் யூசுப் அலி தலைமை வகித்தாா். பொருளாளா் எம். சபீா் அகமது முன்னிலை வகித்தாா்.

அசோசியேஷனின் தலைவா் ஆா்.ஹெச். முகமது காசிம் விழாவில் பங்கேற்று, ராஜகிரி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த 800-க்கும் மேற்பட்ட ஏழை-எளிய குடும்பங்களுக்கு ரமலான் பெருநாள் நலத்திட்ட உதவிகளாக புத்தாடைகள், அரிசி உள்ளிட்டவற்றை வழங்கினாா்.

இதில் நிா்வாகிகள் பாரூக், மாலிக், சுல்தான், அக்பா், பீா்முகமது, ராஜகிரி ஊராட்சித் தலைவா் சமீமா பா்வீன், உறுப்பினா்கள் முபராக், சிக்கந்தா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். நிறைவில், அசோசியேஷன் செயலா் அன்வா் அலி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.