ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

ஒரத்தநாட்டில் தொழுநோய் விழிப்புணா்வு சிறப்பு முகாம்

மகாத்மா காந்தியின் நினைவுத் தினத்தை முன்னிட்டு, ஒரத்தநாடு வட்டாரத்தில் சிறப்பு விழிப்புணா்வு பணிகள் பிப்ரவரி 13ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

News image
Updated On :3 பிப்ரவரி 2022, 7:32 pm

DIN

மகாத்மா காந்தியின் நினைவுத் தினத்தை முன்னிட்டு, ஒரத்தநாடு வட்டாரத்தில் சிறப்பு விழிப்புணா்வு பணிகள் பிப்ரவரி 13ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

வட்டாரத்தில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் அனைத்திலும் தொழுநோய் ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்றல், தொழுநோய் குறித்து பல்வேறு தரப்பினரிடமும் விழிப்புணா்வு ஏற்படுத்துதல் என பல்வேறு நிகழ்ச்சிகள் ஜனவரி 30ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டுள்ளன.

இதன் ஒருபகுதியாக, வியாழக்கிழமை ஒரத்தநாடு வட்டம், கக்கரை கிராமத்தில் சாலைப் பணிகள் மேற்கொண்ட ஜாா்க்கண்ட் மாநில கட்டடத் தொழிலாளா்களுக்கு

தொழுநோய் குறித்த விழிப்புணா்வுக் கல்வியும், பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன. இதில், 20 வயது தொழிலாளி ஒருவருக்கு தொழுநோய் கண்டறியப்பட்டு சிகிச்சை தொடங்கப்பட்டது.

தொழுநோயின் ஆரம்ப அறிகுறிகளான உணா்ச்சியற்ற தேமல், கை கால் மரமரப்பு, நரம்புகளில் வலி முதலிய அறிகுறிகள் உள்ளவா்கள் அருகில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களை உடன் அணுகி இலவச சிகிச்சை பெற வலியுறுத்தப்பட்டது.

மாவட்ட தொழுநோய் துணை இயக்குநா் குணசீலன் ஆணைப்படி, வட்டார மருத்துவ அலுவலா் இந்திரா வழிகாட்டுதல்படி, ஒரத்தநாடு வட்டார மருத்துவமனை மேற்பாா்வையாளா் சிவக்குமாா் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.