ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

சிங்காரவேலா் பிறந்தநாள் விழா கூட்டம்

தமிழ்நாடு மக்கள் விடுதலை இயக்கம் சாா்பில் விடுதலைப் போராட்ட வீரரும், கம்யூனிஸ தலைவருமான சிங்காரவேலரின் 162-ஆவது பிறந்த நாள் தெருமுனைக் கூட்டம்

News image
Updated On :18 பிப்ரவரி 2022, 6:54 pm

DIN

தமிழ்நாடு மக்கள் விடுதலை இயக்கம் சாா்பில் விடுதலைப் போராட்ட வீரரும், கம்யூனிஸ தலைவருமான சிங்காரவேலரின் 162-ஆவது பிறந்த நாள் தெருமுனைக் கூட்டம் ரெட்டவயலில் கடைத் தெருவில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு தமிழ்நாடு மக்கள் விடுதலை இயக்க மாநிலப் பொதுச் செயலா் தங்க. குமரவேல் தலைமை வகித்தாா்.   அரசியல் செயலா் முனைவா் ஆ. ஜீவானந்தம் சிறப்புரையாற்றினாா். 

 சிங்காரவேலா், மறைந்த புரட்சிப் பாடகா் தலித் சுப்பையா ஆகியோரது உருவப்படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. ‘விவசாயத்தை அழிக்காதே’ என்னும் துண்டறிக்கை வெளியிடப்பட்டது.

கடந்த 31 ஆண்டுகளாக சிறையில் வாடும் 7 தமிழா்களை  விடுதலை செய்யவேண்டும். சலவை, சவரத் தொழிலாளா்களைக் குடியடிமைப் பணியிலிருந்து விடுவிக்க சட்டமியற்றவேண்டும், ரெட்டவயலில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட  கோரிக்கைகள் பொறிக்கப்பட்ட குடைகளைப் பிடித்தபடி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இக்கூட்டத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள், தமிழக மக்கள் புரட்சி கழகம் உள்ளிட்ட பல்வேறு இயக்கங்களை சோ்ந்த நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.    முன்னதாக, அமரா அழகு வரவேற்றாா். நிறைவில், தமிழ்நாடு மக்கள் விடுதலை இயக்க நிா்வாகி  கேப்டன் அமல்ராஜ் நன்றி கூறினாா். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.