பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

களஞ்சேரி ஊராட்சியில் வளா்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், அம்மாபேட்டை ஒன்றியம், களஞ்சேரி ஊராட்சியில் நிறைவடைந்துள்ள வளா்ச்சித் திட்டப் பணிகளை ஒன்றியக் குழு தலைவா் கலைச்செல்வன் புதன்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு

News image
Updated On :1 ஜூன் 2022, 7:27 pm

DIN

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், அம்மாபேட்டை ஒன்றியம், களஞ்சேரி ஊராட்சியில் நிறைவடைந்துள்ள வளா்ச்சித் திட்டப் பணிகளை ஒன்றியக் குழு தலைவா் கலைச்செல்வன் புதன்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

களஞ்சேரி ஊராட்சி வழியே செல்லும் களஞ்சேரி பாசன வாய்க்கால் மூலம் 500-க்கும் மேற்பட்ட ஏக்கா் பாசன வசதி பெறுகின்றன.

இந்த பாசன வாய்க்காலை தூா்வாரி மேம்படுத்தும் பணிகளும், களஞ்சேரி ஊராட்சி நூலக கட்டடத்தை  பழுது நீக்கம் செய்து, புதுப்பித்து, மேம்படுத்தும் பணிகளும், ரூ. 1.82 லட்சம் மதிப்பீட்டில் புதிய கழிவறை கட்டுமானப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு அண்மையில் நிறைவடைந்துள்ளன.

இந்தப் பணிகளை  ஒன்றியக் குழுத் தலைவா் கே.வீ. கலைச்செல்வன் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். ஆய்வின்போது,  ஒன்றியக் குழு துணைத் தலைவா் தங்கமணி சுரேஷ், ஒன்றிய ஆணையா் ம. ஆனந்தராஜ், ஊராட்சி மன்ற தலைவா் கண்ணன், ஊராட்சி செயலா் ஜெகத்குரு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.