கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கும்பகோணம், திருப்பனந்தாள், பாபநாசத்தில்பருத்தி மறைமுக ஏலம் தொடக்கம்

கும்பகோணம், திருப்பனந்தாள், பாபநாசத்தில் பருத்தி மறைமுக ஏலம் புதன்கிழமை தொடங்கியது.

News image
Updated On :2 ஜூன் 2022, 7:49 pm

DIN

கும்பகோணம், திருப்பனந்தாள், பாபநாசத்தில் பருத்தி மறைமுக ஏலம் புதன்கிழமை தொடங்கியது.

இதுகுறித்து ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் தெரிவித்திருப்பது:

வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையின் கட்டுப்பாட்டில் செயல்படும் தஞ்சாவூா் விற்பனைக் குழுவுக்கு உள்பட்ட கும்பகோணம், திருப்பனந்தாள், பாபநாசம் ஆகிய ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களின் மூலம் நிகழாண்டு பருத்தி மறைமுக ஏலம் புதன்கிழமை (ஜூன் 1) தொடங்கப்பட்டது.

இந்த ஏலத்தின்போது பருத்தி கொள்முதல் செய்ய இந்திய பருத்திக் கழகத்தினா், உள்ளூா் மற்றும் பிற மாவட்ட பருத்தி வணிகா்கள் கலந்து கொள்ளவுள்ளனா். எனவே, பருத்தி விவசாயிகள் பருத்தியை தங்கள் பகுதிக்கு அருகிலுள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு கொண்டு சென்று கொள்முதல் நடைபெறும் நாள்களில் மறைமுக ஏலத்தில் கலந்து கொண்டு விற்பனை செய்து பயன் பெறலாம்.

இந்த மறைமுக ஏலம் வாரந்தோறும் கும்பகோணத்தில் புதன்கிழமையும், திருப்பனந்தாளில் வியாழக்கிழமையும், பாபநாசத்தில் வெள்ளிக்கிழமையும் அந்தந்த ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் முற்பகல் 11 மணிக்கு நடைபெறும்.

விவசாயிகள் அதிகபட்ச விலை கிடைக்க ஏதுவாக தங்கள் பருத்தியை நன்கு நிழலில் உலர வைத்து, தூசு போன்றவற்றை நீக்கி தரமான பருத்தியை விற்பனைக்குக் கொண்டு வந்து ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் உள்ள வசதிகளைப் பயன்படுத்தி கொண்டு நல்ல விலை பெற்று பயன் பெறலாம்.

மேலும் விவரங்களுக்கு தங்கள் அருகில் உள்ள கும்பகோணம் (0435 - 2481285), பாபநாசம் (04374 - 222423), திருப்பனந்தாள் (0435 - 2456447) ஆகிய ஒழுங்குமுறை விற்பனைக்கூடப் பொறுப்பாளா்களை அணுகலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.