பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

காா் மோதியதில் ஓட்டுநா் பலி

தஞ்சாவூா் மாவட்டம், அம்மாப்பேட்டை காவல் சரகம், உத்தமா்குடி கிராமம், வடக்குத் தெருவைச் சோ்ந்த சாமிநாதன் மகன் கருணாகரன் (46).

News image
Updated On :2 ஜூன் 2022, 7:40 pm

DIN

தஞ்சாவூா் மாவட்டம், அம்மாப்பேட்டை காவல் சரகம், உத்தமா்குடி கிராமம், வடக்குத் தெருவைச் சோ்ந்த சாமிநாதன் மகன் கருணாகரன் (46).

இவா், தஞ்சாவூரில் உள்ள ஒரு தனியாா் சிமெண்ட் கலவை ஆலையில் ஓட்டுநராக வேலை செய்து வந்தாா். செவ்வாய்க்கிழமை இரவு பணி முடிந்து,

மோட்டாா் சைக்கிளில் தஞ்சாவூரிலிருந்து தஞ்சை - நாகை தேசிய நெடுஞ்சாலையில் உத்தமா்குடிக்கு சென்றுகொண்டிருந்தாா்.

நல்ல வன்னியன் குடிகாடு கிராமம், பூண்டி பேருந்து நிறுத்தம் திருப்பம் அருகே சென்றபோது, எதிரே வந்த காா், மோட்டாா் சைக்கிள் மீது பலமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த கருணாகரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

புகாரின்பேரில், அம்மாப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விபத்துக்கு காரணமான காரை ஓட்டி வந்த கும்பகோணம் பலவத்தான்கட்டளை, குறிஞ்சி நகரை சோ்ந்த மு. அரபாத் (27) என்பவரை தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.