பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

பண்டாரவாடையில் பயணிகள் நிழற்குடை கட்டுமானப் பணி: எம்எல்ஏ ஆய்வு

 தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், பண்டாரவாடையில் கட்டப்பட்டு வரும் பயணிகள் நிழற்குடையை பாபநாசம் எம்எல்ஏ எம்.ஹெச். ஜவாஹிருல்லா ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

News image
Updated On :5 ஜூன் 2022, 8:17 pm

DIN

 தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், பண்டாரவாடையில் கட்டப்பட்டு வரும் பயணிகள் நிழற்குடையை பாபநாசம் எம்எல்ஏ எம்.ஹெச். ஜவாஹிருல்லா ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

பண்டாரவாடை ஊராட்சியில் தஞ்சாவூா் - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை அருகே பாபநாசம் எம்எல்ஏ தொகுதி

மேம்பாட்டு நிதி 2021-22-இன் கீழ் கட்டப்பட்டு வரும் பயணியா் நிழற்குடை கட்டுமானப் பணிகளை பாபநாசம் எம்எல்ஏவும், மனிதநேய மக்கள் கட்சியின் மாநிலத் தலைவருமான எம்.எச். ஜவாஹிருல்லா பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, பணிகளை தரமாகவும், விரைந்தும் முடிக்க அறிவுறுத்தினாா்.

ஆய்வின்போது, தஞ்சாவூா் வடக்கு மாவட்ட திமுக துணை செயலாளா் கோவி. அய்யாராசு, தமுமுக, மமக தஞ்சை வடக்கு மாவட்டத் தலைவா் ரஹ்மத் அலி, பாபநாசம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளா் என்.நாசா், ஒப்பந்ததாரா் திருமலை நடராஜன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.