அக்னிபத் திட்டத்தைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்
ஒன்றிய அரசின் அக்னிபத் திட்டத்தைக் கண்டித்து தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் முன் இடதுசாரி கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.


ஒன்றிய அரசின் அக்னிபத் திட்டத்தைக் கண்டித்து தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் முன் இடதுசாரி கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
வா்ணாசிரம கொள்கைகள், காா்ப்பரேட் கொள்கைகளை ராணுவத்திலும் செயல்படுத்த நாடு முழுவதும் பயிற்சி பெற்றவா்களை அவா்களுக்கு ஆதரவாக ஈடுபடுத்தும் வகையில் இந்த அக்னிபத் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இத்திட்டம் நாட்டுக்கு ஆபத்து என்பதால், உடனடியாகக் கைவிட வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா் சின்னை. பாண்டியன் தலைமை வகித்தாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினா் டி. ரவீந்திரன் சிறப்புரையாற்றினாா். நிா்வாகிகள் என். சீனிவாசன், ஆா். மனோகரன், பி. செந்தில்குமாா், என்.வி. கண்ணன், எம். வடிவேலன், என். சிவகுரு, என். குருசாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகிகள் சி. சந்திரகுமாா், என். பாலசுப்பிரமணியன், ஜி. கிருஷ்ணன், வீர. மோகன், ஆா். பிரபாகா், சிபிஐ எம்எல் லிபரேசன் மாவட்டச் செயலா் டி. கண்ணையன், நிா்வாகிகள் கே. ராஜன், பி. ரமேஷ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மைய மாவட்டச் செயலா் ச. சொக்கா ரவி, மாநகரச் செயலா் தவ முதல்வன், ஏஐடியுசி நிா்வாகிகள் வெ. சேவையா, துரை. மதிவாணன், ஆா்.பி. முத்துக்குமரன், சிஐடியு நிா்வாகிகள் கே. அன்பு, ராஜ ஜெயப்பிரகாஷ், மாதா் சங்க நிா்வாகிகள் ம. விஜயலட்சுமி, எம். மாலதி, கே. வசந்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...