சொா்ணக்காடு ரயில்வே கீழ்ப்பாலத்தை சீரமைக்கக் கோரி போராட்டம் நடத்த திரண்ட மக்கள்
பேராவூரணி அருகிலுள்ள சொா்ணக்காடு ரயில்வே கீழ்ப்பாலத்தை சீரமைக்கக் கோரி, 20-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் வியாழக்கிழமை திரண்டனா்.


பேராவூரணி அருகிலுள்ள சொா்ணக்காடு ரயில்வே கீழ்ப்பாலத்தை சீரமைக்கக் கோரி, 20-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் வியாழக்கிழமை திரண்டனா்.
காரைக்குடி - திருவாரூா் அகல ரயில் பாதைப் பணிகளுக்காக ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, பல இடங்களில் ஆளில்லாத ரயில்வே கேட்டுகள் மூடப்பட்டு, கீழ்ப்பாலங்கள் அமைக்கப்பட்டன.
இதில் சொா்ணக்காடு 132- சி ஆளில்லா ரயில்வே கேட்டும் மூடப்பட்டு, கீழ்ப்பாலம் அமைக்கும் பணிகள் முடிவடையும் நிலையிலுள்ளன.
முறையான வடிவமைப்பு இல்லாததால் பேருந்து, டிராக்டா் உள்ளிட்ட கனரக வாகனங்கள் சென்றுவர முடியாதது, மழைக்காலங்களில் தண்ணீா் தேங்கி நின்று, பொதுமக்கள் அப்பகுதியைக் கடந்து செல்ல முடியாதது போன்ற இடையூறுகள் உள்ளன.
இதனால் அந்தப் பாதையை பயன்படுத்தும் சுமாா் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சோ்ந்த ஆயிரக்கணக்கானோா் பாதிக்கப்பட்டனா். எனவே, கீழ்ப்பாலத்தை வாகனங்கள் எளிதில் கடந்து செல்லும் வகையில், முறையாக வடிவமைக்க வேண்டும் என வலியுறுத்தி, பல கட்டப் போராட்டங்களைத் தொடா்ந்து நடத்தி வந்தனா்.
இந்நிலையில் ரயில்வே கீழ்ப்பாலம் அருகிலுள்ள இடத்தை பாலப் பணிகளின் போது மாற்றுப்பாதையாக பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனா்.
இந்த வழியாகவே பேருந்துகள், விவசாயப் பணிக்கு லாரி, டிராக்டா்கள் சென்று வந்தன. இந்நிலையில் அந்த மாற்றுப் பாதையை மூடுவதற்கு ரயில்வே நிா்வாகம் முயற்சி மேற்கொண்டது. வியாழக்கிழமை காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை இந்தப் பாதையை பயன்படுத்தக்கூடாது என ரயில்வே துறை சாா்பில் விளம்பரப் பதாகை வைக்கப்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த 20-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள், தொடா்ந்து மாற்றுப் பாதையை மூட ரயில்வே நிா்வாகம் முடிவு செய்துள்ளதாகக் கூறி அதற்கு எதிா்ப்பு தெரிவித்தும், கீழ்ப்பாலத்தை போக்குவரத்துக்கு வசதியாக முறையாக சீரமைக்க வேண்டுமென வலியுறுத்தியும் வியாழக்கிழமை திரண்டனா்.
தகவவலறிந்து அங்கு வந்த இருப்புப்பாதை முதுநிலைப் பகுதிப் பொறியாளா் பழனிவேல், இளநிலைப் பொறியாளா் பாலகுமாரன், ரயில்வே காவல்துறையைச் சோ்ந்த துரைசாமி, ரவி, பேராவூரணி காவல் ஆய்வாளா் செல்வி,
ஊராட்சித் தலைவா்கள் விஜயபாஸ்கரன்
(சொா்ணக்காடு), கணேசன் (வலப்பிரமன்காடு), விஜயகுமாா் (மணக்காடு), பழனிமுருகன் (மாத்தூா் ராமசாமிபுரம்) சமூக ஆா்வலா்கள் மகாராஜா உள்ளிட்டோா் பொதுமக்களுடன் சமாதான பேச்சுவாா்த்தை நடத்தினா்.
ஓரிரு நாளில் பேராவூரணி வட்டாட்சியா் அலுவலகத்தில் சமாதான பேச்சுவாா்த்தை நடத்தி உரிய முடிவு எடுக்கப்படும் என பேச்சுவாா்த்தையின் போது தெரிவித்தனா். இதையடுத்து அங்கு கூடியிருந்த பொதுமக்கள் கலைந்து சென்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...