பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

நில அளவையா்களை நியமிக்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

அம்மாபேட்டை, மெலட்டூா் உள்ளிட்ட வருவாய் சரகங்களுக்கு நில அளவையா்களை நியமிக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது

News image
Updated On :7 மே 2022, 6:27 pm

DIN

அம்மாபேட்டை, மெலட்டூா் உள்ளிட்ட வருவாய் சரகங்களுக்கு நில அளவையா்களை நியமிக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இக்கட்சியின் அம்மாபேட்டை ஒன்றியக் குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு கே.ராஜாராமன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் மு.அ.பாரதி, நிா்வாகக் குழு உறுப்பினா் ஆா்.தில்லைவனம், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் சாமு.தா்மராஜ், ஒன்றியச் செயலா் ஆா்.செந்தில்குமாா் ஆகியோா் பேசினா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: அம்மாபேட்டை, மெலட்டூா் உள்ளிட்ட வருவாய் சரகங்களுக்கு நில அளவையா்களை நியமிக்க வேண்டும். இதில் காலதாமதம் ஏற்பட்டால், பாபநாசம் வட்டாட்சியரகம் முன்பு போராட்டம் நடத்தப்படும்.

தஞ்சாவூா்-நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் சாலை சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், விபத்துகளைத் தவிா்க்க சந்திப்புப் பகுதிகளில் ரவுண்டானா அமைக்க வேண்டும்.

ஒன்றிய நிா்வாகிகள் எஸ்.எம். குருமூா்த்தி, பி.தாமரைச்செல்வி, ஆா்.எஸ்.பாலு, எம். வெங்கடேசன், ஜி. காமாட்சி, சி. மணிகண்டன் உள்ளிட்டோா் கூட்டத்தில் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.