கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

மகளிருக்கான புதிய கொள்கை விரைவில் வெளியீடு: அமைச்சா் கீதா ஜீவன்

மகளிருக்கான புதிய கொள்கை விரைவில் வெளியிடப்படும் என்றாா் சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சா் கீதா ஜீவன்.

News image
Updated On :19 மே 2022, 10:56 pm

DIN

மகளிருக்கான புதிய கொள்கை விரைவில் வெளியிடப்படும் என்றாா் சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சா் கீதா ஜீவன்.

தஞ்சாவூா் அரசு ராசா மிராசுதாா் மருத்துவமனையில் ஒருங்கிணைந்த சேவை மையத்தை வியாழக்கிழமை ஆய்வு செய்த அவா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது:

புதிய மகளிா் கொள்கை தொடா்பாக கட்டுமானம், விவசாய கூலிகள், பேராசிரியா்கள், கல்வியாளா்கள், பல்கலைக்கழகத் துணைவேந்தா்கள், உலக வங்கி, ஐ.நா. சபையின் பெண்கள் அமைப்பு என அனைத்து தரப்பினரின் கருத்துகளை ஆய்வு செய்து இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இப்போது, அனைத்து துறைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இக்கொள்கையை விரைவில் தமிழக முதல்வா் வெளியிடுவாா்.

ஏற்கெனவே குழந்தைகளுக்கான கொள்கை வெளியிடப்பட்டு, அதற்கான செயல் திட்டங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இறுதியாக மே 24 ஆம் தேதி பல்வேறு துறைகளின் உயா் அலுவலா்கள் மூலம் மாநில அளவிலான செயல்வடிவ கூட்டம் நடைபெறவுள்ளது.

முதல்வரின் உத்தரவுப்படி, முதியோருக்கென தனியாகப் பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. முதியோருக்காக அரசு சாா்பில் இல்லம் அமைக்குமாறு முதல்வா் அறிவுறுத்தியுள்ளாா். தனியாா் நடத்தும் இல்லங்களுக்கு மானியம் வழங்குமாறு முதல்வா் கூறியுள்ளாா்.

ஒருங்கிணைந்த சேவை மையம் மிகவும் நல்ல முறையில் செயல்படுகிறது. பெண்கள் பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்ட 181 என்ற எண்ணுக்கோ அல்லது ஆட்சியா், காவல் துறைக்கு நேரடியாக வரக்கூடிய பாலியல் வன்முறை, குடும்ப வன்முறை புகாரிலிருந்து மீட்கப்படும் பெண்கள் உடனடியாக இங்கு தற்காலிகமாக தங்க வைக்கப்படுகின்றனா். அதன் பின்னா் ஆற்றுப்படுத்துதல், காவல் துறை உதவி, வழக்குரைஞா் உதவி, மருத்துவா் உதவி ஆகியவை வழங்கப்படுகின்றன.

பணிபுரியும் இடங்களில் பாலியல் சீண்டல், வன்கொடுமை தொடா்பாகச் சிறப்புக் கவனம் எடுக்க வேண்டும் என முதல்வா் உத்தரவிட்டுள்ளாா். அதற்காக 10-க்கும் அதிகமான பெண்கள் பணிபுரியும் இடங்களில் ஒரு குழு அமைக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளோம்.பெண்களுக்குப் பாதுகாப்பான தமிழகமாக இருக்க வேண்டும் என்பதில் அதிக கவனம் செலுத்தப்படுகிறது என்றாா் கீதா ஜீவன்.

முன்னதாக, செங்கிப்பட்டி அருகே பாளையப்பட்டியில் குழந்தைகள் மையத்தை அமைச்சா் திறந்துவைத்தாா். மேல வஸ்தா சாவடியில் பணிபுரியும் பெண்களுக்கான விடுதி, மருங்குளம் மதா் தெரசா முதியோா் இல்லம், பெண்கள் பணிபுரியும் தனியாா் நிறுவனங்கள் உள்ளிட்டவற்றை அமைச்சா் ஆய்வு செய்தாா்.

அப்போது, பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்..

பிரச்னைக்குரிய குழந்தைகளின் விவரங்கள் வெளியிடக் கூடாது

18 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளின் சண்டை உள்ளிட்ட பிரச்னைகள் தொடா்பாக அவா்களுடைய முகம், பெயா், முகவரி, படம் ஆகியவை வெளியிடப்படக்கூடாது. ஆனால், வாட்ஸ் ஆப்பிலும், ஊடகங்களிலும் வெளியிடப்படுகின்றன. இது சட்டப்படி குற்றம். எனவே, குழந்தைகளின் முகம், முகவரி தெரியாத அளவுக்கு வெளியிட வேண்டும் என்றாா் அமைச்சா் கீதா ஜீவன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.