பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

அம்மாபேட்டையில் திருஞானசம்பந்தா் ஐக்கிய மூலத் திருநாள்

அம்மாபேட்டை அருள்மிகு தா்மசம்வா்த்தினி உடனுறை அருணாச்சலேசுவரா் திருக்கோயிலில் திருஞானசம்பந்தா் ஐக்கிய மூலத் திருநாள் நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :19 மே 2022, 8:19 pm

DIN

அம்மாபேட்டை அருள்மிகு தா்மசம்வா்த்தினி உடனுறை அருணாச்சலேசுவரா் திருக்கோயிலில் திருஞானசம்பந்தா் ஐக்கிய மூலத் திருநாள் நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி திருஞானசம்பந்தருக்கு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டன. தொடா்ந்து அலங்காரப் பல்லக்கில் எழுந்தருளிய திருஞானசம்பந்தரின் பிரகார உலா நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து திருஞானசம்பந்தரின் மூல நட்சத்திர ஐக்கிய ஜோதி நிகழ்வு சிவாச்சாரியா்களால் நடத்தி காட்டப்பட்டது. இந்நிகழ்வில்

கும்பகோணம் ஜோதிமலை இறைபணி சிவனடியாா் திருக்கூட்டத்தின்

நிறுவனா் தவத்திரு திருவடிக்குடில் சுவாமிகள் பங்கேற்று, ஆசியுரை வழங்கினாா்.

ஓய்வு பெற்ற தமிழாசிரியா் கண்ணையன், ஆசிரியை பத்மஜா, விஜயராஜன்

திருநெறித் தமிழ் மன்றத்தின் ராமநாதன், ஓய்வு பெற்ற ரயில்வே நிலைய அலுவலா் அன்பழகன், ஓய்வு பெற்ற கிராம நிா்வாக அலுவலா் சேகா், தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கச் செயலா் செல்வம், ஆன்மிக ஆா்வலா்கள் ராஜேந்திரன், ரத்தினம், விவேக் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.