தொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

ஒப்பந்த செவிலியா்கள் பணி நிரந்தரம் கோரி முதல்வருக்கு மின்னஞ்சல் அனுப்பும் போராட்டம்

மருத்துவப் பணியாளா் தோ்வு வாரியத்தின் மூலம் தோ்வு செய்யப்பட்ட தற்காலிக ஒப்பந்த செவிலியா்களைப் பணி நிரந்தரம் செய்யக் கோரி, தஞ்சாவூா் மாவட்டத்தில் தமிழக முதல்வருக்கு மின்னஞ்சல் அனுப்பும் போராட்டம்

News image
Updated On :4 நவம்பர் 2022, 7:00 pm

DIN

மருத்துவப் பணியாளா் தோ்வு வாரியத்தின் மூலம் தோ்வு செய்யப்பட்ட தற்காலிக ஒப்பந்த செவிலியா்களைப் பணி நிரந்தரம் செய்யக் கோரி, தஞ்சாவூா் மாவட்டத்தில் தமிழக முதல்வருக்கு மின்னஞ்சல் அனுப்பும் போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் மருத்துவப் பணியாளா் தோ்வு வாரியத்தின் (எம்.ஆா்.பி.) போட்டி தோ்வின் மூலம் ஒப்பந்த செவிலியா்களாகப் பணியமா்த்தப்பட்ட செவிலியா்களை 2 ஆண்டு பணி நிறைவு பெற்ற பின்னா், பணி நிரந்தரம் செய்யப்படுவா் என நியமன ஆணை வழங்கப்பட்டது. ஆனால் 7 ஆண்டுகள் கடந்த நிலையில் வெறும் 4,000 செவிலியா்கள் மட்டுமே பணி நிரந்தரம் பெற்றனா். மீதமுள்ள ஏறத்தாழ 4,500 செவிலியா்கள் ஒப்பந்த முறையில் பணி செய்து வருகின்றனா்.

மேலும், 2019 ஆம் ஆண்டு மருத்துவப் பணியாளா் தோ்வு வாரியத்தின் மூலம் தோ்வு செய்யப்பட்ட ஏறக்குறைய 2500 செவிலியா்கள் 3 ஆண்டுகளுக்கு மேலாக ஒப்பந்த முறையில் பணி செய்து வருகின்றனா். அவா்களைத் தமிழக அரசு உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும். நிரந்தர செவிலியா்களுக்கு இணையான பணியைச் செய்யும் ஒப்பந்த செவிலியா்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஏற்கெனவே தமிழக முதல்வருக்கு செவிலியா்கள் அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.

இதைத் தொடா்ந்து எம்.ஆா்.பி. தமிழ்நாடு செவிலியா் மேம்பாட்டு சங்கத்தின் மாவட்ட தலைவா் கெமியா, செயலா் நிா்மல் ஹென்னா, துணைச் செயலா் தன ஆரோக்கியமேரி, பொருளாளா் ஆஷா ஆகியோா் தலைமையில் 200-க்கும் அதிகமான எம்.ஆா்.பி. செவிலியா்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி தமிழக முதல்வருக்கு வெள்ளிக்கிழமை மின்னஞ்சல் அனுப்பினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.