ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

கூட்டணி அமைத்தால் தான் திமுகவை வீழ்த்த முடியும்: டிடிவி.தினகரன்

கூட்டணி அமைத்தால் தான் திமுகவை வீழ்த்த முடியும் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலர் டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :7 நவம்பர் 2022, 6:08 am

DIN

கூட்டணி அமைத்தால் தான் திமுகவை வீழ்த்த முடியும் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலர் டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தஞ்சையில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், கண்முன்னே வடிகால் வாய்க்கால் குழிகள் தோண்டப்பட்டுள்ளது. ஆனால் 80 முதல் 85 சதவீத பணிகள் முடிந்து உள்ளதாக திமுக கூறி வருகின்றது. அவர்களுக்கு சதவீதம்தான் ஞாபகம் வருகிறது. மக்களிடம் அவர்கள் உண்மையைக் கூறி இருக்கலாம், அதனால்தான் மக்கள் கோபப்படுகிறார்கள். மக்களை ஏமாற்றாமல் முடிந்ததை செய்யுங்கள். 

மக்கள் அனுமதித்தால் தொடர்ந்து ஆட்சி செய்யுங்கள், இல்லை என்றால் வழி விட்டு செல்லுங்கள் என தெரிவித்த அவர், மதவாதத்தை திமுக கூட்டணி குறிப்பாக திருமா போன்றவர்கள் கைவிட்டு, தமிழ்நாட்டு மக்களுக்கு தேவையான தமிழக அரசிடமும், மத்திய அரசாங்கத்திடம் பேசி அதற்கான போராட்டங்களை நடத்தி பெற்றுத் தர வேண்டும். இல்லையென்றால் அதற்கான பலனை 24 தேர்தலில் அனுபவிப்பார்கள். 

இன்றைக்கு திமுக வரம்பு மீறி, தவறான ஆட்சி செய்யும் போது மூக்கணாங்கயிறு போல் இந்த ஆளுநர் தேவைதான். திமுக என்ற தீய சக்தியை வீழ்த்த வேண்டும் என்றால், அம்மாவின் தொண்டர்கள் அனைவரும் கூட்டணி அமைத்தால் தான் திமுகவை வீழ்த்த முடியும். திமுகவிற்கு எதிராக கூட்டணி அமைப்பதற்க எப்போதும் நேசகரம் நீட்டுவோம், கூட்டணி தலைமை குறித்து அந்த நேரத்தில் முடிவு செய்து கொள்ளலாம் என அவர் தெரிவித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.