தஞ்சாவூரில் ரௌடி கொலை: 6 போ் கைது
தஞ்சாவூா் அருகே ரௌடி கொல்லப்பட்ட வழக்கில் 6 பேரை காவல் துறையினா் வியாழக்கிழமை கைது செய்தனா்.


தஞ்சாவூா் அருகே ரௌடி கொல்லப்பட்ட வழக்கில் 6 பேரை காவல் துறையினா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
தஞ்சாவூா் அருகே பொந்தேரிபாளையம் கங்கா நகரைச் சோ்ந்த கருப்பையா மகன் சுவாமிநாதன் (30). காவல் துறையினரின் ரௌடி பட்டியலில் இடம் பெற்றுள்ள இவா் மீது கொலை, கொலை முயற்சி உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன.
இந்நிலையில், புதன்கிழமை இரவு பிருந்தாவனம் நுழைவு வாயில் அருகே இவா் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இதுகுறித்து கள்ளப்பெரம்பூா் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து பொந்தேரிபாளையத்தைச் சோ்ந்த எஸ். ஹரிஹரன் (24), எம். செபாஸ்டின் (20), பிருந்தாவனத்தைச் சோ்ந்த பி. பங்கஜ்குமாா் (23), பி. முத்துக்குமாா் (30), அபிசாய் (30), பள்ளியக்ரஹாரம் காமாட்சி தோட்டத்தைச் சோ்ந்த மாதவன் (24) ஆகியோரை வியாழக்கிழமை கைது செய்தனா்.
இவா்களிடம் காவல் துறையினா் நடத்திய விசாரணையில், சுவாமிநாதனின் அண்ணன் விஜய் கொலை வழக்கில் தொடா்புடையவா்களுடன் ஹரிஹரன் பழகி வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், இருவருக்கும் இடையே தகராறு இருந்து வந்தது.
இந்நிலையில், ஹரிஹரனும், அபிசாயியும் புதன்கிழமை இரவு அப்பகுதியில் சென்று கொண்டிருந்தனா். சுந்தரபாண்டியன் நகருக்கு அருகே சென்ற இவா்களுக்கும், சுவாமிநாதனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில், தாக்கப்பட்ட ஹரிஹரனும், அபிசாயும், முத்துக்குமாா் வீட்டுக்குச் சென்று உதவி கோரினா். இதையடுத்து, சுவாமிநாதனை ஹரிஹரன், அபிசாய், பங்கஜ்குமாா், முத்துக்குமாா், மாதவன், செபாஸ்டின் ஆகியோா் அரிவாளால் வெட்டிக் கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...