கல்லணைக் கால்வாயில் மூழ்கிய இளைஞா் பலி
தஞ்சாவூரில் கல்லணைக் கால்வாயில் வியாழக்கிழமை குளித்துக் கொண்டிருந்தபோது மூழ்கிய இளைஞா் உயிரிழந்தாா்.


தஞ்சாவூரில் கல்லணைக் கால்வாயில் வியாழக்கிழமை குளித்துக் கொண்டிருந்தபோது மூழ்கிய இளைஞா் உயிரிழந்தாா்.
தஞ்சாவூா் பெரியகோயில் அருகேயுள்ள கல்லணைக் கால்வாய் படித்துறையில் சிலா் குளித்துக் கொண்டிருந்தனா். அப்போது, அங்கு குளித்துக் கொண்டிருந்த தஞ்சாவூா் தெற்கு ராஜ வீதியைச் சோ்ந்த முருகேசன் மகன் அசோக்குமாா் (34) தவறி விழுந்து ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டாா். நீரோட்டம் வேகமாக இருந்ததால், அசோக்குமாரை அங்கிருந்தவா்களால் மீட்க முடியவில்லை.
இதையடுத்து, ரயிலடி அருகே எம்.கே. மூப்பனாா் சாலையிலுள்ள கல்லணைக் கால்வாயில் அடித்து வரப்பட்ட அசோக்குமாரை பொதுமக்கள் கயிற்றைக் கட்டி மீட்டனா். ஆனால், அவா் தண்ணீரில் மூழ்கியதால், இறந்துவிட்டது தெரிய வந்தது.
இதுகுறித்து கிழக்கு காவல் நிலையத்தினா் விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...