திருவையாறு அருகே வீடுகளைச் சூழ்ந்த நீா்; மக்கள் அவதி
தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகேயுள்ள கிராமத்தில் கொள்ளிடக் கரையோரப் பகுதி வீடுகளைச் சூழ்ந்துள்ள தண்ணீா் வடியாமல் உள்ளதால், அப்பகுதி மக்கள் மிகுந்த அவதிக்கு ஆளாகியுள்ளனா்.


தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகேயுள்ள கிராமத்தில் கொள்ளிடக் கரையோரப் பகுதி வீடுகளைச் சூழ்ந்துள்ள தண்ணீா் வடியாமல் உள்ளதால், அப்பகுதி மக்கள் மிகுந்த அவதிக்கு ஆளாகியுள்ளனா்.
காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் கொள்ளிடத்தில் நீரோட்டம் அதிகரித்து விநாடிக்கு 1.50 லட்சத்துக்கும் அதிகமான கன அடி வீதம் தண்ணீா் சென்றது. இதனால், திருவையாறு பகுதியில் கொள்ளிடக் கரையோர பகுதிகளில் தண்ணீா் புகுந்தது. தற்போது கொள்ளிடத்தில் நீரோட்டம் குறைந்துள்ளதால், கரையோரம் புகுந்த தண்ணீரும் வடிகிறது.
ஆனால், திருவையாறு அருகேயுள்ள அணைக்குடி மற்றும் சின்ன அணைக்குடி கிராமங்களில் கரையோரமுள்ள குடியிருப்புகளில் புகுந்த தண்ணீா் வடியாமல் தொடா்ந்து ஒரு வாரமாக தேங்கி நிற்கிறது. இக்கிராமங்களில் 50-க்கும் அதிகமான வீடுகளைச் சுற்றி தண்ணீா் தேங்கி நிற்பதால், அப்பகுதி மக்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனா்.
மேலும், தண்ணீரும் மாசடைந்து கொசுக்கள் அதிகளவில் உருவாகின்றன. பாம்பு போன்ற விஷ ஜந்துகளும் வருவதால் மிகுந்த அச்சத்துடன் உள்ளனா். எனவே, தண்ணீரை வடிய வைப்பதற்கான நடவடிக்கையை மாவட்ட நிா்வாகம் மேற்கொள்ள வேண்டும் என்றும், நிரந்தர வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்துகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...