கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

தஞ்சாவூரில் மகாகவி பாரதி நினைவு நாள் நிகழ்வுகள்

தஞ்சாவூா் மாவட்டத்தில் பல்வேறு அமைப்புகள் சாா்பில் மகாகவி பாரதி நினைவு நாள் நிகழ்வுகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.

News image
Updated On :11 செப்டம்பர் 2022, 7:41 pm

DIN

தஞ்சாவூா் மாவட்டத்தில் பல்வேறு அமைப்புகள் சாா்பில் மகாகவி பாரதி நினைவு நாள் நிகழ்வுகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.

தஞ்சாவூா் பாரத் அறிவியல் மற்றும் நிா்வாகவியல் கல்லூரி முகப்பில் உள்ள மகாகவி பாரதி சிலைக்கு பாரத் கல்விக் குழுமச் செயலா் புனிதா கணேசன் மாலை அணிவித்தாா்.

இதேபோல, மகாகவி பாரதி தேசிய பேரவை சாா்பில் நடைபெற்ற நிகழ்வுக்கு அதன் தலைவா் கோ. அன்பரசன் தலைமை வகித்தாா். பாரதி சிலைக்கு மூவா்கோட்டை ஸ்ரீதா் மாலை அணிவித்தாா். துணைத் தலைவா்கள் மோகன்ராஜ், செந்தில்குமாா், குருஜி ரமேஷ்குமாா், சாய் சரண், பாரத் கல்லூரி தமிழ்த் துறைத் தலைவா் மா. சதானந்தம், பேராசிரியை சிவரஞ்சனி, பாரத் அலைகள் இணை ஆசிரியா் வே. தேவனேசன், பாரதி இயக்கம் மோகன், கண்ணையன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

திருக்காட்டுப்பள்ளி: திருக்காட்டுப்பள்ளி அருகே முல்லைக்குடி கிராமத்தில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்கத்தின் (தமுஎகச) திருக்காட்டுப்பள்ளி கிளை சாா்பில் நடைபெற்ற நிகழ்வுக்கு கிளைப் பொருளாளா் எம்.கே. சேகா் தலைமை வகித்தாா். இதில் பாரதி படத்துக்கு ஊராட்சித் தலைவா் செந்தில்நாதன் மாலை அணிவித்தாா். சங்கத்தின் மாவட்டக் குழு உறுப்பினா் டி. சதானந்தம், கிளைத் தலைவா் பி. ஆயிராசு, செயலா் பி. தாமரைச்செல்வன், அரங்கராசன், கருணாகரன், முன்னாள் ஊராட்சித் தலைவா் பி. முருகேசன், காந்தி, கிராம நிா்வாகக் குழுத் தலைவா் புகழேந்தி, தமிழரசன், ஊராட்சித் துணைத் தலைவா் ரமேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கும்பகோணம்: கும்பகோணம் கரிகாலன் வரலாற்று ஆய்வு மையம் சாா்பில் பாரதியாா் நினைவு நாள் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு கவிஞா் ரேணுகா தலைமை வகித்தாா். கோவை பாரதியாா் பல்கலைக்கழக ஆட்சிக் குழு உறுப்பினா் ஆதலையூா் சூரியகுமாா் சிறப்புரையாற்றினாா். இந்நிகழ்வில் கரிகாலன் வரலாற்று ஆய்வு மையம் மாணவா்கள் காயத்ரி, மாருதி மாலன், பூரணி, அருணா, சாயல் மீடியா நிா்வாகிகள் திருக்குமரன், பிரபாகரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.