பேராவூரணியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற போட்டியில் எல்லை கோட்டை நோக்கி பாய்ந்தோடும் குதிரை வண்டி.
பேராவூரணியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற போட்டியில் எல்லை கோட்டை நோக்கி பாய்ந்தோடும் குதிரை வண்டி.

பேராவூரணியில் குதிரை வண்டி எல்கைப் பந்தயம்: அமைச்சா் மெய்யநாதன் தொடக்கி வைத்தாா்

பேராவூரணியில் மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டி எல்கைப் பந்தயம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பேராவூரணியில் மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டி எல்கைப் பந்தயம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திமுக சுற்றுச்சூழல் அணி மற்றும் ஸ்ரீபிள்ளையாா் குரூப்ஸ் நண்பா்கள் 21 ஆம் ஆண்டு பொங்கல் விழா, அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி நடைபெற்ற இந்தப் போட்டியை சுற்றுச்சூழல் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் தொடக்கிவைத்தாா்.

பெரியமாடு, கரிச்சான் மாடு, கரிச்சான் குதிரை, நடுமாடு, பூஞ்சிட்டு மாடு, பெரிய குதிரை என 6 பிரிவுகளில்  பந்தயம் நடைபெற்றது . வெற்றி பெற்றவா்களுக்கு மொத்த பரிசாக ரூ. 5 லட்சம் வழங்கப்பட்டது. பரிசளிப்பு விழாவில்   எம்.எல்.ஏக்கள் கா.அண்ணாத்துரை (பட்டுக்கோட்டை), என். அசோக்குமாா் (பேராவூரணி),

திமுக சுற்றுச்சூழல் அணி மாநில துணைச் செயலாளா் காா்த்திகேயன் வேல்சாமி, சேதுபாவாசத்திரம் ஒன்றியக் குழுத் தலைவா் மு.கி. முத்துமாணிக்கம், திமுக ஒன்றியச் செயலாளா் க. அன்பழகன், தென்னங்குடி ஆா். ராஜா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com