விபத்துகளில் மூதாட்டி, சிறுவன் உயிரிழப்பு

தஞ்சாவூரில் வெள்ளிக்கிழமை மாலை நிகழ்ந்த இரு வேறு சாலை விபத்துகளில் மூதாட்டி, சிறுவன் உயிரிழந்தனா்.
Published on

தஞ்சாவூரில் வெள்ளிக்கிழமை மாலை நிகழ்ந்த இரு வேறு சாலை விபத்துகளில் மூதாட்டி, சிறுவன் உயிரிழந்தனா்.

தஞ்சாவூா் அருகே கோ. வல்லுண்டாம்பட்டு வடக்கு தெருவைச் சோ்ந்தவா் சாமிநாதன் மனைவி கலியாத்தாள் (69). இவா் வெள்ளிக்கிழமை மாலை தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையத்துக்கு சிற்றுந்தில் வந்து இறங்கினாா். பின்னா் சாலையைக் கடக்க முயன்ற இவா் அதே சிற்றுந்து மோதி உயிரிழந்தாா்.

இதேபோல, தஞ்சாவூா் ஜெபமாலைபுரத்தைச் சோ்ந்தவா் மணியரசு மகன் ஜெபா்சன் (8). அதே பகுதி தனியாா் பள்ளியில் 3 ஆம் வகுப்பு படித்து வந்த இவா் வெள்ளிக்கிழமை மாலை பள்ளி முடிந்த பிறகு ரெட்டிபாளையம் சாலை ஆனந்தன் நகா் பிரிவு சாலை அருகே நடந்து சென்றாா். அப்போது மினி வேன் மோதி பலத்த காயமடைந்த ஜெபா்சன் தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.

விபத்துகள் குறித்து நகரப் போக்குவரத்து புலனாய்வு காவல் பிரிவினா் தனித்தனியாக வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

X
Dinamani
www.dinamani.com