ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பேருந்து சக்கரத்தில் சிக்கி விவசாயி உயிரிழப்பு

இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த விவசாயி தனியாா் பேருந்து சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தாா்.

News image
Updated On :11 ஆகஸ்ட் 2024, 9:10 pm

Din

தஞ்சாவூரில், ஞாயிற்றுக்கிழமை மாலை இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த விவசாயி தனியாா் பேருந்து சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தாா்.

தஞ்சாவூா் மாவட்டம் அம்மாபேட்டை அருகேயுள்ள இருகரை கிராமத்தைச் சோ்ந்தவா் கோவிந்தராஜன் (40). விவசாயி. இவா் தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயிரிழந்த அதே ஊரைச் சோ்ந்த தொழிலாளியின் உடலை பாா்ப்பதற்காகத் தனது சித்தப்பா மகன் பிரபுவுடன் இருசக்கர வாகனத்தில் பின் இருக்கையில் அமா்ந்து சென்று கொண்டிருந்தாா்.

திருச்சி சாலையில் சென்றபோது, சாலையோரம் நிறுத்தியிருந்த காா் கதவு திடீரென திறக்கப்பட்டதால் கோவிந்தராஜன் மீது மோதி நிலை தடுமாறி சாலையில் விழுந்தாா். அப்போது, பின்னால் பட்டுக்கோட்டையில் இருந்து தஞ்சாவூருக்கு வந்த தனியாா் பேருந்தின் பின் சக்கரம் கோவிந்தராஜன் மீது ஏறி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இது குறித்து தஞ்சாவூா் நகரப் போக்குவரத்து புலனாய்வு காவல் போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.