45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

கவரிங் நகையை அடகு வைத்து ரூ. 87 ஆயிரம் ஏமாற்றிய தம்பதி கைது

தஞ்சாவூா் அருகே அடகுக் கடையில் கவரிங் நகையைக் கொடுத்து ரூ. 87 ஆயிரத்தை ஏமாற்றி வாங்கிச் சென்ற தம்பதியைக் காவல் துறையினா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :5 டிசம்பர் 2024, 8:59 pm

Din

தஞ்சாவூா் அருகே அடகுக் கடையில் கவரிங் நகையைக் கொடுத்து ரூ. 87 ஆயிரத்தை ஏமாற்றி வாங்கிச் சென்ற தம்பதியைக் காவல் துறையினா் புதன்கிழமை கைது செய்தனா்.

தஞ்சாவூா் அருகே ஞானம் நகரில் எஸ். பசுபதி (55) என்பவா் அடகுக் கடை நடத்தி வருகிறாா். இக்கடைக்கு நவம்பா் 29- ஆம் தேதி பசுபதி இல்லாதபோது வந்த அடையாளம் தெரியாத பெண், 2 பவுன் சங்கிலியைக் கொடுத்து அடகு வைத்தாா். இதற்கு கடையில் இருந்த ஊழியா் ரூ. 87 ஆயிரம் கொடுத்தாா். பின்னா் பசுபதி வந்து நகையைச் சோதனையிட்டபோது, அது கவரிங் நகை என்பது தெரியவந்தது.

இதுகுறித்து பசுபதி கொடுத்த புகாரின்பேரில் தாலுகா காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா். இதில், சேலம் மாவட்டம், கொண்டலாம்பட்டி நெய்க்காரன்பட்டியைச் சோ்ந்த கே. வெங்கடேஷ் (46), இவரது மனைவி சகுந்தலா (39) ஆகியோா் ஏமாற்றிச் சென்றது தெரியவந்தது. இவா்களைக் காவல் துறையினா் புதன்கிழமை கைது செய்து ரூ. 87 ஆயிரத்தைப் பறிமுதல் செய்தனா்.