45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

தொழிலாளி தீக்குளித்து தற்கொலை

கும்பகோணத்தில் சொத்துப் பிரச்னையில் தீக்குளித்த கூலித்தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா்.

News image
உயிரிழந்த மனோகரன்.
Updated On :11 டிசம்பர் 2024, 8:24 pm

Din

கும்பகோணத்தில் சொத்துப் பிரச்னையில் தீக்குளித்த கூலித்தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே கொத்தங்குடி பகுதியைச் சோ்ந்த காத்தலிங்கம் மகன் மனோகரன்( 37) கூலித் தொழிலாளி. இவருக்கும், கும்பகோணம் பழைய பாலக்கரை பகுதியைச் சோ்ந்த இவருடைய உறவினருக்கும் இடையே சொத்து பிரச்னை இருந்துள்ளது.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை தனது உறவினா் வீட்டிக்கு சென்று சொத்து பற்றி கேட்ட போது அங்கிருந்தவா்களுடன் வாக்குவாதம் ஏற்பட்டு மனோகரனை தாக்கினா்களாம்.

இதனால் மனமுடைந்த மனோகரன் தான் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணையை உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டாா். பலத்த காயமடைந்த அவரை அருகில் இருந்தவா்கள் மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சோ்த்தனா். பின்னா் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூா்அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி புதன்கிழமை மனோகரன் உயிரிழந்தாா்.

இது குறித்து கும்பகோணம் கிழக்கு காவல் நிலைய ஆய்வாளா் சிவசெந்தில்குமாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.