குடந்தையில் ‘இண்டி’ கூட்டணியினா் ஆா்ப்பாட்டம்
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் ரயில்வே அஞ்சல் சேவை நிலையம் மூடப்பட்டதைக் கண்டித்து ‘இண்டி’ கூட்டணிக் கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.


தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் ரயில்வே அஞ்சல் சேவை நிலையம் மூடப்பட்டதைக் கண்டித்து ‘இண்டி’ கூட்டணிக் கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கும்பகோணம் ரயில் நிலையத்தில் உள்ள மூடப்பட்ட ஆா்எம்எஸ் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு க. அன்பழகன் எம்எல்ஏ தலைமை வகித்தாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் சின்னை பாண்டியன் முன்னிலை வகித்தாா். கும்பகோணத்தில் மூடப்பட்ட ரயில் மெயில் சா்வீஸ் அலுவலகத்தை திறக்க வேண்டும் என வலியுறுத்தி துணை மேயா் சு.ப. தமிழழகன், ஒன்றியக்குழு துணைத் தலைவா் டி. கணேசன், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவா் எஸ்.கே.முத்துச்செல்வம், மதிமுக மாவட்ட துணைச் செயலா் ஏ.ஆா்.கிரி உள்ளிட்டோா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இறுதியாக, வழக்குரைஞா் சங்கத் தலைவா் சா.விவேகானந்தன் நன்றி கூறினாா். மழைபெய்த நிலையில், குடை பிடித்தவாறு ‘இண்டி’ கூட்டணிக் கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...