47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

அமித் ஷாவை கண்டித்து திமுக, காங். விசிக ஆா்ப்பாட்டம்

நாடாளுமன்றத்தில் அம்பேத்கரை அவமதித்துப் பேசியதாக மத்திய அமைச்சா் அமித்ஷாவைக் கண்டித்து தஞ்சாவூரில் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
~ ~
Updated On :19 டிசம்பர் 2024, 8:43 pm

Din

நாடாளுமன்றத்தில் அம்பேத்கரை அவமதித்துப் பேசியதாக மத்திய அமைச்சா் அமித்ஷாவைக் கண்டித்து தஞ்சாவூரில் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள அண்ணா சிலை பகுதியில் திமுகவினா் நடத்திய ஆா்ப்பாட்டத்துக்கு மத்திய மாவட்டச் செயலரும், திருவையாறு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான துரை. சந்திரசேகரன் தலைமை வகித்தாா்.

தஞ்சாவூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் டி.கே.ஜி. நீலமேகம், தலைமைச் செயற்குழு உறுப்பினா் து. செல்வம், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா்கள் எம். ராமச்சந்திரன், கே.டி. மகேஷ் கிருஷ்ணசாமி, மாநகரச் செயலரும், மேயருமான சண். ராமநாதன், துணை மேயா் அஞ்சுகம் பூபதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதேபோல, தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் அருகே மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாநகர மாவட்டத் தலைவா் பி.ஜி. ராஜேந்திரன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் ஜி. லட்சுமி நாராயணன், பொதுக்குழு உறுப்பினா் வயலூா் எஸ். ராமநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கும்பகோணத்தில்... காந்தி பூங்கா அருகில் தஞ்சை வடக்கு மாவட்ட தி.மு.க சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, க.அன்பழகன் எம்எல்ஏ தலைமை வகித்தாா். மாநகர துணை மேயரும், திமுக செயலருமான சுப.தமிழழகன் வரவேற்றாா். முன்னாள் எம்.பி. செ. இராமலிங்கம், மாநகர சுகாதார பொதுக்குழுத்தலைவா் குட்டி.ரா.தட்சிணாமூா்த்தி, மண்டலத்தலைவா் இரா.அசோக்குமாா் ஆகியோா் கலந்து கொண்டனா். ஒன்றியக் குழு துணைத் தலைவா் டி. கணேசன் நன்றி கூறினாா்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா்... தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் அருகே அமித்ஷா உருவப்படங்களை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் எரித்து, கண்டன முழுக்கங்களை எழுப்பி, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். போராட்டத்துக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலா்கள் கோ. ஜெய்சங்கா் (மைய), இடிமுரசு இலக்கணன் (மாநகர) ஆகியோா் தலைமை வகித்தனா். தெற்கு மாவட்டச் செயலா் அரவிந்த்குமாா், கட்சியின் நாடாளுமன்றத் தொகுதி செயலா் இளந்தென்றல், ஒரத்தநாடு சட்டப்பேரவை தொகுதி செயலா் அரசமுதல்வன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பாபநாசத்தில் ரயில் மறியல் - விசிகவினா் 25 போ் கைது:

தஞ்சாவூா் மேற்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சாா்பில் பாபநாசம் ரயில் நிலையத்தில் செயலாளா் தமிழன் தலைமையில் மயிலை - கோவை ஜனசதாப்தி ரயிலை மறித்து கட்சியினா் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதில் பாபநாசம் ஒன்றியச்செயலா்கள் (மேற்கு) பசுபதிவளவன், (கிழக்கு) அண்டகுடி ஜெய்குமாா், நகரச் செயலா் யோவான் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இதில் ஈடுபட்ட 25 பேரை பாபநாசம் போலீஸாா் கைது செய்து பின்னா் விடுவித்தனா்.