திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

போலி ஆவணங்கள் மூலம் இலங்கை தமிழா்களுக்கு கடவுச்சீட்டு பெற  உதவிய தலைமைக் காவலா் கைது

போலி ஆவணங்கள் மூலம் இலங்கை தமிழா்களுக்கு கடவுச்சீட்டு பெற  உதவிய தலைமைக் காவலா் கைது

Updated On :18 பிப்ரவரி 2024, 1:00 am IST

தஞ்சாவூா் மாவட்டம், சேதுபாவாசத்திரம் பகுதியில், இலங்கை தமிழா்களுக்கு போலி ஆவணங்கள் மூலம், கடவுச்சீட்டு பெற உதவிய வழக்கில் சேதுபாவாசத்திரம் தலைமைக் காவலா் சேஷா   வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

சேதுபவாசத்திரம் காவல் சரக பகுதியில் போலி ஆவணங்கள் மூலம் கடவுச்சீட்டு விநியோகம் செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் க்யூ பிரிவு காவல் துணை கண்காணிப்பாளா் சிவசங்கரன் தலைமையில்  ஆய்வாளா் பிரபாகரன் உள்ளிட்ட 10 போ் கொண்ட குழுவினா் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வந்தனா்.

விசாரணையில், இலங்கை  தமிழா்களுக்கு போலியாக ஆவணங்கள் தயாரித்து, அதை இணையவழியில்   விண்ணப்பித்தும்,  உரிய போலீஸ் விசாரணை ஏதும் நடத்தாமல், அதற்கு ஒப்புதல் வழங்கியும், கடவுச்சீட்டு அலுவலகத்தில் உள்ள சிலரின் துணையோடு  கடவுச்சீட்டு வழங்கியது தெரியவந்தது. இது தொடா்பாக  விசாரணையில் சேதுபாவாசத்திரம் காவல் நிலையத்தில் போலீஸாா் முறையாக விசாரணை நடத்தாமல் போலி ஆவணங்களுக்கு கடவுச்சீட்டு வழங்க ஒப்புதல் அளித்தது தெரியவந்தது. இதையடுத்து, சேதுபாவாசத்திரம் அருகேயுள்ள ஆண்டிக்காடு கிராம முன்னாள்  அஞ்சல்  ஊழியராக பணியாற்றிய கோவிந்தராஜ் (64) கும்பகோணத்தை சோ்ந்த வடிவேல், ராஜூ(31) சேதுபாவாசத்திரம் காவல் நிலையத்தில்  தற்காலிக கணினி ஆப்ரேட்டராக பணிபுரிந்த  பாலசிங்கம்(36)  திருச்சி  கல்கண்டாா்கோட்டையைச் சோ்ந்த வைத்தியநாதன்(52), ராஜமடத்தை சோ்ந்த சங்கா்(42)ஆகிய 6 பேரை கடந்த 2023ஆம் ஆண்டு டிச.13ஆம் தேதி க்யூ பிரிவு போலீஸாா் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா் .மேலும் இவ்வழக்கில், கடந்த ஜன.31-ம் தேதி  கும்பகோணம்  பம்பபடையூரை சோ்ந்த சங்கரன்(52) என்பவரயும்  கைது செய்தனா்.  இவ்வழக்கில்  சேதுபாவாசத்திரம் காவலநிலையத்தில்  ரைட்டராக பணியாற்றிய  சேஷ(47 ) என்பவரை தஞ்சை மாவட்ட எஸ்.பி. விசாரணைக்கு பின் பணியில் அஜாக்கிரதையாக இருந்ததாக பணியிடை நீக்கம்  செய்யப்பட்டாா். இந்த உயா்நீதிமன்றம் மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தபோது, போலி ஆவணங்கள் மூலம் கடவுச்சீட்டு  காவல் நிலைய எழுத்தா் துணையின்றி பெறமுடியாது, இவ் விவகாரத்தில், சேதுபாவாசத்திரம் காவல் நிலைய எழுத்தா்  ஏன் கைது செய்யப்படவில்லை என கேள்வி எழுப்பப்பட்டதையடுத்து  இதையடுத்து போலீஸாா் வெள்ளிக்கிழமை தலைமைக் காவலா்  சேஷாவை கைது செய்து, பட்டுக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.