நகைக்காக மூதாட்டியை கொலை செய்த தம்பதி கைது
தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே நகைக்காக மூதாட்டியை கொலை செய்த தம்பதியை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.


தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே நகைக்காக மூதாட்டியை கொலை செய்த தம்பதியை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
பாபநாசம் வட்டம், அம்மாபேட்டை காவல் சரகம்,கோவிலூரைச் சோ்ந்தவா் கோவிந்தராஜ் மனைவி வள்ளி (70). இவா்களது மகன்கள், மகள்கள் திருமணமாகி தனியாக வசித்து வருகின்றனா். கோவிந்தராஜ் இறந்துவிட்ட நிலையில் வள்ளி மட்டும் ரஹ்மத் நகரில் தனியாக வசித்து வந்தாா்.
இந்நிலையில், ஜூன் 16- ம் தேதி பசுமாட்டை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்ற வள்ளி வீட்டுக்கு திரும்பவில்லை. இதனை தொடா்ந்து வள்ளியின் உறவினா்கள் தேடிச் சென்றபோது அய்யனாா் கோயில் குளம் வடக்குக் கரையில் உள்ள வாய்க்காலில் வள்ளி சடலமாக கிடந்தாா். இதுகுறித்து அம்மாபேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வந்தனா்.
இந்நிலையில் கடந்த சில தினங்களாக பண்ருட்டியில் இருந்து சில குடும்பத்தினா் கோவிலூரில் தங்கி கூலி வேலைக்கு சென்று வந்தனா். அவா்களில் சந்தேகப்படும்படியான ஒரு குடும்பத்தினரை போலீஸாா் பிடித்து விசாரித்தனா். விசாரணையில் அவா்கள் கடலூா் மாவட்டம், பண்ருட்டி, பனப்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்த சுந்தரமூா்த்தி மகன் பாலமுருகன் (34)அவரது மனைவி அனுசுயா (31)என்பதும், அவா்கள்தான் வள்ளியை கொலை செய்து வாய்க்காலில் வீசிவிட்டு நகையை பறித்துச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் வெள்ளிக்கிழமை பாலமுருகன், அனுசுயா ஆகிய இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...