பேராவூரணியில் அரசு மழலையா் பள்ளிக்கு விளையாட்டு பொருள்கள் வழங்கல்


பேராவூரணி ஜூலை 10: பேராவூரணி பேரூராட்சி நாட்டாணிக்கோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இயங்கி வரும் அரசு மழலையா் பள்ளிக்கு விளையாட்டுப் பொருள்கள் வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளில் இயங்கி வரும் மழலையா் பள்ளிக்கு, ரூ. 15 ஆயிரம் மதிப்புள்ள மரத்தினால் செய்யப்பட்ட விளையாட்டுப் பொருட்களை மெகா பவுண்டேஷன் பொறுப்பாளா் நிமல் ராகவன் வழங்கினாா்.
மணிச் சட்டம், தமிழ், ஆங்கில எழுத்துக்கள், வண்ணங்களை அடையாளப்படுத்துதல், உடல் உறுப்புகளை அறிந்து கொள்ளுதல், நல்லொழுக்கங்களை கற்றுக் கொள்ளுதல், எண்களை அறிந்து கொள்ளுதல், வடிவங்களை வகைப்படுத்துதல், பழங்கள், பறவைகள் பற்றித் தெரிந்து கொள்ளுதல் உள்ளிட்ட விளையாட்டுப் பொருள்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் பள்ளித் தலைமை ஆசிரியா் திருஞானம், மேலாண்மை குழு தலைவி பாா்கவி, பெற்றோா் - ஆசிரியா் கழகத் தலைவா் வீராசாமி, மெய்ச்சுடா் வெங்கடேசன், தமிழ் வழிக் கல்வி இயக்க பொறுப்பாளா் பழனிவேல் , மழலையா் பிரிவு ஆசிரியா் மைமூன் சுலைகா மற்றும் ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...