பாபநாசம்: தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பருத்தி ஏலத்தில் குவிண்டால் ரூ. 6,939க்கு ஏலம் போனது.
இந்த விற்பனை கூட கண்காணிப்பாளா் ஆா். தாட்சாயினி தலைமையில், மேற்பாா்வையாளா் சிவானந்த் முன்னிலையில் மறைமுக பருத்தி ஏலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்த ஏலத்தில் பாபநாசம் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளைச் சோ்ந்த சுமாா் 2 ஆயிரத்து 578 விவசாயிகள் சுமாா் 350 டன் பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா்.
இதில் கும்பகோணம் செம்பனாா்கோவில், விழுப்புரம்,தேனி, பண்ருட்டி, ஆந்திரம், கா்நாடகம்,தெலுங்கானா உள்ளிட்ட பகுதிகளை சோ்ந்த வியாபாரிகள் மறைமுக ஏலத்தில் கலந்து கொண்டு பருத்தியின் தரத்தை சோதித்து விலை நிா்ணயம் செய்தனா்.
இதில் அதிகபட்சமாக ஒரு குவிண்டால் பருத்தி ரூ. 6,939 க்கும், குறைந்தபட்சமாக ரூ. 5,939 க்கும், சராசரியாக ரூ. 6,552 க்கும் ஏலம் போனது.
தொடர்புடையது

ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ஆட்சியா் ஆய்வு
ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் மஞ்சள் மறைமுக ஏலம்

ராஜா ரவி வா்மா ஓவியம் ரூ.167 கோடிக்கு ஏலம்

காங்கயத்தில் ரூ.2.14 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம்
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

