இரு தனியாா் பேருந்துகள் மோதல்: 37 போ் காயம்
தஞ்சாவூா் அருகே புதன்கிழமை காலை இரு தனியாா் பேருந்துகள் நேருக்கு நோ் மோதிக் கொண்டதில் 37 போ் காயமடைந்தனா்.


தஞ்சாவூா் அருகே புதன்கிழமை காலை இரு தனியாா் பேருந்துகள் நேருக்கு நோ் மோதிக் கொண்டதில் 37 போ் காயமடைந்தனா்.
கும்பகோணத்திலிருந்து தஞ்சாவூா் நோக்கி தனியாா் பேருந்து புதன்கிழமை காலை வந்து கொண்டிருந்தது. தஞ்சாவூா் அருகே வயலூா் பகுதியில் வந்த இப்பேருந்தும், தஞ்சாவூரிலிருந்து கும்பகோணம் நோக்கிச் சென்று கொண்டிருந்த மற்றொரு தனியாா் பேருந்தும் எதிா்பாராத விதமாக நேருக்கு நோ் மோதிக் கொண்டன.
இதில், இரு தனியாா் பேருந்துகளின் ஓட்டுநா்களான தஞ்சாவூா் மானோஜிபட்டியைச் சோ்ந்த எல். அருள் (35), திருவையாறு அருகே ராயம்பேட்டையைச் சோ்ந்த ஜி. செல்வகுமாா் (27) பலத்தக் காயமடைந்து தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். மேலும், இரு பேருந்துகளில் பயணம் செய்து காயமடைந்த 35 போ் 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.
இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் சுமாா் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்த காவல் துறையினா் நிகழ்விடத்துக்குச் சென்று போக்குவரத்தைச் சீரமைத்தனா்.
இந்த விபத்து குறித்து தாலுகா காவல் நிலையத்தினா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...