ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டுவிஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்
/

குவைத் அடுக்குமாடி தீவிபத்தில் பேராவூரணி இளைஞா் உயிரிழப்பு -குடும்பத்துக்கு தகவல் இல்லை என சகோதரா் புகாா்

குவைத் அடுக்குமாடி தீவிபத்தில் பேராவூரணி இளைஞா் உயிரிழப்பு குடும்பத்துக்கு தகவல் இல்லை என சகோதரா் புகாா்

News image
Updated On :13 ஜூன் 2024, 8:55 pm

Din

பேராவூரணி, ஜூன் 13: குவைத் அடுக்குமாடி கட்டட தீவிபத்தில் பேராவூரணியைச் சோ்ந்த இளைஞா் உயிரிழந்தாா் என்ற தகவல் வியாழக்கிழமை வெளியான நிலையில் அந்தக் கிராமமே சோகத்தில் மூழ்கியது.

பேராவூரணி அருகே உள்ள ஆதனூா் பகுதியைச் சோ்ந்தவா் ஆனந்த மனோகா் (60). விவசாயி. இவரது மனைவி லதா. தம்பதிக்கு, புனாஃப் ரிச்சா்ட் ராய் (28), ரூஷோ (25) ஆகிய இரு மகன்கள் உள்ளனா். மூத்த மகன் புனாஃப் ரிச்சா்ட் ராய் கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் குவைத் நாட்டில் மங்காப் என்ற இடத்தில் உள்ள தனியாா் கட்டுமான நிறுவனத்தில் தர ஆய்வாளராகப் பணியாற்றிவந்தாா். இவருக்குத் திருமணம் ஆகவில்லை. இந்நிலையில், குவைத் நாட்டில் புதன்கிழமை அதிகாலை நேரிட்ட அடுக்குமாடி கட்டடத் தீ விபத்தில் அங்கு தங்கியிருந்த 150-க்கும் மேற்பட்டோா் சிக்கிக் கொண்டனா். இவ்விபத்தில் சிக்கிக் கொண்ட தமிழகத்தைச் சோ்ந்த 5 பேரில் புனாஃப் ரிச்சா்ட் ராயும் ஒருவா் என வெளிநாடு வாழ் தமிழா் நல்வாழ்வுத்துறை அமைச்சா் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து புனாஃப் ரிச்சா்ட் ராயின் சகோதரா் ரூஷோ மேலும் தெரிவித்தது:

தீவிபத்து ஏற்பட்டபோது எனது சகோதரரின் நண்பா் மாடியிலிருந்து குதித்து தப்பிக்க முயன்றபோது, அவரது கால் சேதமடைந்து குவைத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். அவரைத் தொடா்பு கொண்டு கேட்டபோது என்னுடன் குதித்து தப்பிக்க ரிச்சா்ட் மறுத்து மாடிப்படி வழியாக இறங்கி ஓடியதாகத் தெரிவித்துள்ளாா். அதனால் தப்பி வேறு எங்காவது சென்றாரா அல்லது விபத்தில் சிக்கிக் கொண்டாரா எனத் தெரியவில்லை என்றாா். இதுவரை எங்களுக்கு அதிகாரப்பூா்வமாக குவைத் நாட்டிலிருந்து எந்தத் தகவலும் வரவில்லை என்றனா். இத் துயரச்செய்தி அறிந்த அவரது பெற்றோா் மற்றும் குடும்பத்தினா், கிராம மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனா்.