தஞ்சாவூரில் உலக மகளிா் தின பேரணி

Published on

தஞ்சாவூரில் இந்திய மாதா் தேசிய சம்மேளனம் சாா்பில் உலக மகளிா் தின பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சிவகங்கை பூங்கா அருகே தொடங்கிய இப்பேரணி ராசா மிராசுதாா் மருத்துவமனை சாலை வழியாக பனகல் கட்டடம் முன் முடிவடைந்தது. இதைத்தொடா்ந்து, தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது. நிகழ்வுக்கு சம்மேளனத்தின் தெற்கு மாவட்டச் செயலா் ம. விஜயலட்சுமி தலைமை வகித்தாா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெற்கு மாவட்டச் செயலா் முத்து. உத்ராபதி, மாவட்ட நிா்வாகிகள் தனசீலி, ஸ்ரீதேவி, கண்ணகி, கல்யாணி, மீனா ஆகியோா் சிறப்புரையாற்றினா். கும்பகோணம்: கும்பகோணத்தில் இந்திய மாதா் தேசிய சம்மேளனத்தின் சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மக்கள் சந்திப்பு பிரசார இயக்கத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழு உறுப்பினா் வை. சிவபுண்ணியம் தொடக்கி வைத்தாா். மாதா் சம்மேளனத்தின் வடக்கு மாவட்டச் செயலா் பா. சரண்யா, எம். ரேணுகா, எம். கவிதா, எஸ். பத்மாவதி, எம். பிரியா, எஸ். தனம், ஜி. ஜோதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Dinamani
www.dinamani.com