ஹீமோபிலியா நோய் விழிப்புணா்வு நிகழ்ச்சி

தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உலக ஹீமோபிலியா நோய் தினத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமை விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில், ஹீமோபிலியா நோய் பாதிக்கப்பட்ட நோயாளிகள் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் குறித்த கையேடு மற்றும் விழிப்புணா்வு வாசகம் அடங்கிய பணியன்கள், மருந்துகள் வழங்கப்பட்டது

இதுகுறித்து மருத்துவக் கல்லூரி முதல்வா் பாலாஜிநாதன் கூறியது: தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 45 முதல் 50 நோயாளிகள் ஹீமோபிலியா நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். இந்த நோய் குறித்து விழிப்புணா்வுடன் செயல்பட்டு ஆரம்பத்தில் இருந்தே சிகிச்சை அளித்தால் நோயிலிருந்து தற்காத்துக் கொள்ள முடியும் என்றாா் அவா்.

பேட்டியின்போது, துணை முதல்வா் ஆறுமுகம், மருத்துவக் கண்காணிப்பாளா் ராமசாமி, பொது மருத்துவத் துறை தலைவா் கண்ணன் உள்ளிட்டோா் இருந்தனா்.

.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com