கும்பகோணம்  நீதிமன்றத்தில்  சென்னை ஐக்கோா்ட்டு நீதிபதி ஆய்வு. படம்
கும்பகோணம் நீதிமன்றத்தில் சென்னை ஐக்கோா்ட்டு நீதிபதி ஆய்வு. படம்

கும்பகோணம் நீதிமன்றத்தில் உயா்நீதிமன்ற நீதிபதி ஆய்வு

கும்பகோணம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் அடிப்படை வசதிகள் குறித்து சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமாா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

கும்பகோணம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை அருகே கும்பகோணம் ஒருங்கிணைந்த நீதிமன்றம் இயங்கி வருகிறது. கடந்த 2013-ஆம் ஆண்டு இந்த நீதிமன்ற வளாகத்தில் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றம், கூடுதல் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவா் மன்றம், நீதித்துறை நடுவா் மன்றம், முதன்மை அமா்வு நீதிமன்றம், கூடுதல் உதவி அமா்வு நீதிமன்றம், மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், 1-ஆவது கூடுதல் உரிமையியல் நீதிமன்றம், 2-ஆவது கூடுதல் உரிமையியல் நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்கள் இயங்கிவருகிறது.

இந்த நீதிமன்றத்தில் கடந்த 10 ஆண்டுகளாக வழக்குரைஞா்களுக்கு உணவக வசதி, காா்நிறுத்துமிடம், அனைத்து நீதிமன்றங்களிலும் குளிா்சாதன வசதி ஆகியவை அமைத்து தரவேண்டும் என்று கும்பகோணம் வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில் கோரிக்கை விடுத்திருந்தனா்.

இந்நிலையில் இந்த நீதிமன்றத்தில் சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமாா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். அப்போது, நீதிபதிகள் மற்றும் வழக்குரைஞா்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி மனு அளிக்கப்பட்டது.

தொடா்ந்து நீதிமன்றத்தில் ஏற்படுத்த வேண்டிய வசதிகள் குறித்து உரிய அறிக்கை தயாா் செய்து அனுப்பிவைக்க பொதுப்பணித்துறை அதிகாரிகளை அறிவுறுத்தினாா். ஆய்வின் போது தஞ்சை மாவட்ட முதன்மை நீதிபதி ஜெஸிந்தா மாா்ட்டின், கூடுதல் மாவட்ட நீதிபதி ராதிகா, குற்றவியல் நீதித்துறை நீதிபதி சண்முகபிரியா, நீதிபதிகள், கும்பகோணம் வட்டாட்சியா் வெங்கடேஸ்வரன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனா்.

பாபநாசத்தில்..: இதேபோல பாபநாசம் நீதிமன்றத்துக்கு புதிய கட்டடம் கட்டுவதற்கான இடத்தை உயா்நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமாா் ஆய்வு செய்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com