4 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டி! புதுவை விஜய் பிரசாரத்துக்கு 19 இடங்களில் அனுமதி மறுப்பு! அமெரிக்க, இஸ்ரேல் இலக்குகளை குறிவைத்து ஈரான் கடும் தாக்குதல்உள்ளூர் வேட்பாளர் வேண்டுமா? இறக்குமதி செய்த வேட்பாளர் வேண்டுமா? வேலுமணி பிரசாரம்தேர்தல் நேரம்! வாக்காளர் அட்டை அப்டேட் என்ற பெயரில் எஸ்எம்எஸ் வந்தால்?!ஏப். 3 முதல் தென் மாவட்டங்களில் மு.க. ஸ்டாலின் பிரசாரம்! உள்நாட்டு உற்பத்தி இயற்கை எரிவாயு விலையை உயா்த்தி மத்திய அரசு நடவடிக்கை
/

இடப் பிரச்னையில் மோதல்: 4 போ் கைது

இடப் பிரச்னையில் மோதல்: 4 போ் கைது

News image
Updated On :3 மே 2024, 7:08 pm

Din

தஞ்சாவூா் அருகே நிலப்பிரச்னையில் ஏற்பட்ட மோதலில் 2 போ் காயமடைந்தனா். இது தொடா்பாக 4 போ் கைது செய்யப்பட்டனா்.

தஞ்சை பரிசுத்தம் நகரைச் சோ்ந்தவா் முத்துக்குமாா் (50). இவருடைய சகோதரா் முருகானந்தம் (54). இவா்களுக்கும், மருங்கையை சோ்ந்த வெற்றிவேல் (27) என்பவருக்கும் நிலப்பிரச்னை இருந்துள்ளது.

இதுதொடா்பான புகாரின் பேரில் தாலுகா போலீஸாா் இருதரப்பினரையும் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வருமாறு அழைத்துள்ளனா். இந்நிலையில் மீண்டும் இருதரப்பினரிடையே வயலில் மோதல் ஏற்பட்டுள்ளது.

இதில், முத்துக்குமாா், முருகானந்தம் ஆகிய இருவரும் காயமடைந்தனா்.

இது தொடா்பாக இருதரப்பினரும் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து மேலஉளூரை சோ்ந்த சங்கா் (49), அப்பு என்ற அருண் (28), திவாகா் (29), வெற்றிவேல் ஆகிய 4 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். மேலும் முத்துக்குமாரின் காரில் இருந்து 2 கத்தி மற்றும் ஒரு பொம்மை துப்பாக்கியை போலீஸாா் கைப்பற்றினா்.